ராமநாதபுரத்துக்கு ரூ. 616 கோடியில் காவிரி நீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காவிரி ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வரரூ. 616 கோடியில் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வரும் 30ம் தேதிமுதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் பொதுவாக குடிநீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் உப்பு உவர்ப்பு தன்மையால் பெரிதும்பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இங்கு குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் நிலவி வருகிறது.

இதற்கு தீர்வாக திருச்சி அருகே காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது திமுக அரசு அளித்துள்ள உறுதிமொழியின்படி வெகுவிரைவாகதயாரிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான நீராதாரமான வைகை நதி மற்றும் ஏனைய சிறு நதிகள் அனைத்தும்வருடத்தின் பெரும் பகுதி வறண்டு கிடப்பதால் அங்குள்ள மக்களுக்கு வருடம் முழுவதும் போதுமான அளவுகுடிநீர் வழங்க இயலவில்லை.

இதனால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு குடிநீரி திட்டங்களும் நிலத்தடி நீரையே நீராதாமாகக் கொண்டுள்ளதால்இம்மாவட்ட மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க இயலவில்லை.

கிணற்று நீர் மற்றும் ஆற்று நீர் ஆகியவை மிகக் குறைவாக கிடைப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் சிலபகுதிகளில் மட்டும் நீரில் உப்புத்தன்மையை அகற்றி குடிநீராக மாற்றி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டு நாள்ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 15 லிட்டர் வீதம் இப் பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்குட்பட்ட 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான இந்தகூட்டுக் குடிநீர் திட்டம் காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு வடிவமைக்கப்பட்டு, அதற்கான விரிவான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அமைப்பு செலவு ரூ. 616 கோடியும், ஆண்டு பராமரிப்பு செலவு ரூ. 16கோடியே 37 லட்சம் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நகர மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையான ரூ. 282 கோடியை தமிழ்நாடு நகரஉட்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக் கழகம் மற்றும் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு நிதி கழகம் ஆகியவற்றிலிருந்துகடனாக பெற்றும், ஊரக குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 333 கோடியே 99 லட்சத்தை நபார்டுவங்கியில் கடன் உதவியாக பெற்றும் இத்திட்டம் செயலாக்கப்படும். இத்திட்டம் முடிவுற்றதும் தமிழ்நாடுகுடிநீர்வடிகால் வாரியமே திட்டத்தினை பராமரிக்கும்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பல கால கனவான குடிநீர் தேவையை நிறைவு செய்யும் காவிரி கூட்டு குடிநீர்திட்டத்ததை ராமநாதபுரம் பரமக்குடியில் வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+