திருப்பதியில் விஐபிக்கள் தொல்லை!
திருப்பதி:தரிசனத்துக்காக அடிக்கடி திருப்பதிக்கு வர வேண்டாம், பக்தர்களுக்கு இடைஞ்சலைத் தர வேண்டாம் என்பதுதான் என திருப்பதி தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி முக்கிய பிரமுகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
திருமலையில் ஒரு நிமிடத்துக்கு 600 பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் முக்கியப் பிரமுகர்களும்வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், இதனால் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கவும், திருமலைக்கு வந்ததன் முழுப் பயன் கிடைக்கவும் ஒரு வினாடிதரிசனமே போதும். இதனால் அடிக்கடி வந்து தான் தரிசிக்க வேண்டிதில்லை என ஆகம சாஸ்திரமே கூறுகிறது.
பக்தர்களின் நெரிசலை தவிர்க்கவே மகா லகு தரிசன முறையை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் தினமும்70,000 பேர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், தரிசனத்துக்காக அடிக்கடி திருப்பதிக்கு வர வேண்டாம்,பக்தர்களுக்கு இடைஞ்சலைத் தர வேண்டாம் என்பது தான்.
திருமலையே வெங்கடாசலபதிக்குத் தான் சொந்தம். இங்கு மாற்று மதத்தினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம். இந்த விஷயத்தில் தேவஸ்தானம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications