விஜய்காந்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்டஈடு: மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க கெடு
சென்னை:விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க வருவாய்துறைஅதிகாரிகள் கெடு கொடுத்துள்ளனர்.
கோயம்போடு நூறு அடி ரோட்டில் உள்ள விஜய்காந்த் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டத்தின்அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில்உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த இடங்களைஅரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
![]() |
ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உள்ளிட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு பணத்தை வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதன்படி மண்டபத்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு வழக்கப்படும் என்றும், அதை காஞ்சிபுரம்வருவாய்துறை அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 18ம் தேதி பெற்று கொள்ளலாம் என்றும் விஜய்காந்த் மனைவிபிரேமலாதவுக்கு வருவாய்த் துறை சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம் மற்றும் அதை சார்ந்த நிலத்தை 60 நாட்களுக்குள் அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மனைவி வழக்கு:
இதற்கிடையே எங்களது திருமண மண்டபத்தை இடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் திருமண மண்டபத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல்உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனியாகப் போட்டியிட்டு 8.33 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. இவ்வளவு வலுவான எங்கள் கட்சியின் தலைமைஅலுவலகம் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலத்தை கட்டுவதற்கு நாங்கள் மாற்றுத் திட்டத்தை வழங்கினோம். அதை வேண்டும் என்றே நிராகரித்து விட்டனர். ஆகவேஏற்கனவே தயாரித்த திட்டப்படி மேம்பாலம் கட்டுவதை ரத்து செய்ய வேண்டும். எங்களது திருமண மண்டபத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும்.
எங்களது கல்யாண மண்டபத்தை கையகப்படுத்தி ரூ. 8.5 கோடி நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் பிரேமலதா. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மக்களுக்காக எதை வேண்டுமானாலும் அள்ளித் தருவேன் என்று ஏற்ற, இறக்கமாக வசனம் பேசும் விஜய்காந்த்தனது மண்டபத்தை பொது மக்கள் வசதிக்காக இடிக்கக் கூடாது என்று கதறுவது ஏன் என்று தெரியவில்லை.
கோவை-ஈரோடு நிர்வாகிகள் நீக்கம்:
இதற்கிடையே தேமுதிகவில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்களின் நிர்வாகிகளை விஜய்காந்த் அதிரடியாக நீக்கியுள்ளார்.
கட்சியில் தனது ஜாதியினருக்கே முக்கியத்துவம் தருகிறார், பணம் இருப்பவர்களே பதவிகளை பிடிக்க முடிகிறது என்று இம் மாவட்டத்தைச் சேர்ந்தநிர்வாகிகள் பலரும் போர்க் கொடி உயர்த்தியுள்ள நிலையில் அவர்களை நீக்கியுள்ளார் விஜய்காந்த்.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்கு விரோதமாகவும், கட்சியில் குழப்பங்களை விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்ட ஈரோடு மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலாளர்தாராபுரம் நாகராஜசோழன், தாராபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் தாசர்பட்டி ராஜேந்திரன், கோவை மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர்சின்ராஜ், மடத்துக்குளம் ஒன்றியம் ராமேகவுண்டன்புதூர் செந்தில்குமார் ஆகியோர் கட்சியின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தும், கட்சி அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.
இவர்களுடன் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது. மேலும், இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும்தலைமை கழகம் கடும் நடவடிக்கை எடுத்து, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications