விமான நிலையத்தைக் கலக்கிய கொய்யா!
சென்னை:சென்னை விமான நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த பெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதில்கொய்யாப் பழங்கள் இருந்ததால் வெடிகுண்டு பீதி அகன்று அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையப் பகுதியில் பயணிகளின் உடமைகளை வைக்கும் பகுதியில்இரவு 10 மணியளவில் ஒரு மர்மப் பெட்டி கிடந்தது. இது யாருடையது என்று தெரியாமல் பாதுகாப்புப்படையினர் விசாரித்தனர்.
ஆனால் யாரும் அந்தப் பெட்டிக்கு உரிமை கொண்டாடவில்லை. இதையடுத்து அதில் குண்டு ஏதேனும்இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பெட்டியை முழுமையாகசோதனையிட்டனர். அதில் குண்டு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இதையடுத்து அந்தப் பெட்டியை முன்னெச்சரிக்கையுடன் திறந்து பார்த்தனர். அப்போது அதில் குண்டுக்குப் பதில்அழகழகான கொய்யாப் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஆப்பிள், கேக் ஆகியவையும்இருந்தது.
அதன் பிறகே அங்கு பீதி குறைந்தது. இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குவிரைந்து வந்தார். அவர்தான் அந்தப் பெட்டியைக் கொண்டு வந்தவர். மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தஅவர் பெட்டியை தவறுதலாக விட்டு விட்டுச் சென்று விட்டாராம்.
தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை விட்டுச் செல்பவர்களுக்கு வழக்கமாக ரூ. 500அபராதம் விதிக்கப்படும். ஆனால் அந்த நபர் மறதி காரணமாக விட்டுச் சென்றதால் அவரை மன்னித்துகொய்யாப் பழப் பெட்டியைக் கொடுத்து அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications