கேரள எல்லையில் தமிழர்கள் வீடு இடிப்பு
பாலக்காடு:பாலக்காடு அருகே கேரள எல்லையில் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும்பதற்றம் நிலவுகிறது.
தமிழக எல்லையில் அட்டப்பாடி பகுதியில் 30,000 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கோட்டத்துறைபகுதியில் கோவை, லாலி ரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் (66). வெங்கடசாமி (40) உள்பட 50க்கும் மேற்பட்டோர்விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்கள் முப்பது ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 10க்கும்மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்மக்கும்பல் இவர்கள் வசித்து வந்த வீடுகளுக்குள் புகுந்தது.
புல்டோசர் மூலம் ஐந்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. உயிருக்கு பயந்த செல்வராஜ், வெங்கடசாமிஉள்பட சிலர் அங்கிருந்து காட்டுக்குள் ஓடி தப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு தங்கியிருந்தகூலி தொழிலார்கள் 10 பேரை அறையில் அடைத்து பூட்டியது. ஆடு, மாடு மற்றும் பல்வேறு பொருட்களைகும்பல் திருடிச் சென்றது.
இக்கும்பல் தாக்கியதில் ஆறுச்சாமி, மாதேஷ், சத்யா, பண்ணாரி, பழனிசாமி ஆகிய 5 கூலித் தொழிலாளர்கள்படுகாயம் அடைந்தனர். இவர்கள் அகளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் மீது நடந்த தாக்குதலில் நில மோசடி கும்பல் பின்னணியாக இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.தமிழர்கள் பெயரில் உள்ள நிலங்களைப் போலி ஆவணம் தயாரித்து இவர்கள் விற்று வந்துள்ளனர். நிலஉரிமையாளர் செல்வராஜின் நிலத்தை, மன்னார்காட்டை சேர்ந்த அப்துல் என்பவருக்கு நாகராஜ் என்பவர் விற்றதகவல் கிடைந்துள்ளது.
செல்வராஜூக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்றும், 10 தமிழர் குடும்பங்களை காலிசெய்யுமாறும் கூறி அப்துல், செல்வராஜை மிரட்டியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகார்கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் அப்துலை எச்சரித்து அனுப்பினர்.
இதுபோல 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான ஏராளமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்துகாற்றாலை அமைக்க விற்றுதும் தெரியவந்துள்ளது.
தமிழக விவசாயிகள் கேரள மர்ம கும்பலால் தாக்கப்பட்டது கண்டித்து அட்டப்பாடியில் இன்று கண்டனஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்துகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications