இட ஒதுக்கீடு-மாநில அதிகாரம் கோரும் வைகோ
சென்னை:இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவின் சீரியமுயற்சியில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பாதுகாக்கவே இந்திய அரசியல் சட்டத்தின்9வது அட்டவணையில் இடம் பெறும் விதத்தில் 1994ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேறியது.
திராவிட இயக்கத்தின் உன்னதமான சமூக நீதிக் கொள்கையைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் இந்த அரசியல்சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட பொது, 3 திமுக எம்பிக்கள் வாக்களிக்காமல் சமூக நீதிக்கு துரோகம்இழைத்தனர். எழுச்சி நடைப்பயணம் மேற்கொண்டு இருந்த நான், நடைபயணத்தை நிறுத்திவிட்டு டெல்லிக்குசென்று வாக்களித்து விட்டு திரும்பி வந்து மீண்டும் நடைபயணம் தொடர்ந்தேன்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 நீதிபதிகளின் அமர்வு மன்றம் சமூக நீதியைப்பாதுகாக்கும் சட்டம் 9வது அட்டவனையில் இடம் பெற்று இருந்தாலும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றுதீர்ப்பு அளித்ததோடு, உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மன்றம், இட ஒதுக்கீட்டுக் சட்டத்தைஆய்வு செய்யும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், சம நீதியும், சமூக நீதியும் கடந்தகாலங்களில் மறுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு உரிய நீதி வழங்கும் கோட்பாடே இட ஒதுக்கீட்டுக்கொள்கை. இதனைப் பாதுகாக்க அதிமுக அரசு தொலைநோக்ககோடு நடவடிக்கைகளை எடுத்து, தமிழகச்சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதோடு, அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையிலும் இடம் பெற உரியநடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தஉச்சநீதிமன்றத்தில் தக்கவிதத்தில் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது. திமுக அரசு இந்தப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தாமல் கடமை தவறியது கண்டனத்துக்குரியது.
இட ஒதுக்கீட்டுக்கான அளவினை நிர்ணயிக்கும் அதிகாரமும், உரிமையும் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களுக்குவழங்கவும், 50 சதவீதம் வரைமுறை நீங்கவும் உரிய விதத்தில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தங்களைமேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications