17 வயது மாணவனின் கீபோர்டு சாதனை!
திருச்சி:திருச்சியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் ராபின் பாட்ரிக்ஸ் தொடர்ந்து 72 மணி நேரம்கீ போர்டு வாசித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
17 வயதாகும் பாட்>க்ஸ், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவரராம்.
கலாமின் விஷன் 2020 கனவை அனைவருக்கும் விளக்கும் வகையிலும், உலகஅமைதியை வலியுறுத்தியும் புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கபாட்ரிக்ஸ் திட்டமிட்டார். இதற்காக அவர் எடுத்துக் கொண்டதுதான் கீ போர்டு.
தற்போது 48 மணி நேரம் தொடர்ந்து கீ போர்டு வாசித்ததுதான் கின்னஸ் உலகசாதனையாக உள்ளது. இதை முறியடிக்க 72 மணி நேரம் தொடர்ந்து கீ போர்டுவாசிக்க தீர்மானித்தார் பாட்ரிக்ஸ். இதையடுத்து நேற்று தனது சாதனை வாசிப்பைத்தொடங்கினார்.
நகரின் முக்கியப் பிரபலங்கள் முன்னிலையில் கீபோர்டு வாசித்து வருகிறார்பாட்ரிக்ஸ். தனது சாதனை முயற்சி குறித்து பாட்ரிக்ஸ் கூறுகையில், நானே சொந்தமாகஎழுதி, இசையமைத்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் வாசிக்கவுள்ளேன். திரைப்படப்பாடல்களும் இடம் பெறும்.
இதுவரை இயற்கை, நாட்டுப்பற்று குறித்து 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும்ஆங்கிலப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளேன். கீ போர்டு வாசிப்பது எனதுபொழுதுபோக்கு அல்ல, வாழ்க்கை, சுவாசம் எல்லாமே அதுதான்.
நான்கு வயதாக இருந்தபோதே கீபோர்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன். 3வருடங்கள் தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு கீ போர்டு வாசிப்பதில் திறமைபெற்றேன் என்றார் பாட்ரிக்ஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications