இங். கிரிக்கெட் அணியில் இன்னொரு இந்தியர்!
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ரவீந்தர் சிங் போபாரா என்ற இந்திய வம்சாவளிவீரர் இடம் பெற்றுள்ளர். ஏற்கனவே சுழற் பந்துவீச்சாளராக உள்ள மாண்டி பனீசரும்இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு கிரிக்கெட் அணிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீர்ரகள்இடம்பெறுவது புதிதல்ல. ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கையைத்தவிர கிட்டத்தட்ட பிற நாட்டு அணிகள் பெரும்பாலானவற்றில் இந்திய வீரர்கள்அவ்வப்போது இடம் பெற்று வருகின்றனர்.
நியூசிலாந்து அணியில் முன்பு தீபக் பட்டேல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள்அணியில் இந்திய வம்சாவளியினர் தவறாமல் இடம் பிடித்து வருகின்றனர்.இங்கிலாந்து அணியிலும் அவ்வப்போது இந்தியர்கள் தலை காட்டுவது வழக்கமானஒன்று. சென்னையில் பிறந்த நாசர் ஹூசேன் இங்கிலாந்து அணியின் கேப்டனாகஇருந்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த சீக்கியரான மாண்டி பனீசர்இடம் பிடித்து ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் மிரட்டலாக விளங்கினார். அவரைக்கடுமையாக விமர்சித்து ஆஸ்திரேலியர்கள் பேசுமளவுக்கு பயமுறுத்தலானபெளலிங்கைக் காட்டினார் பனீசர்.
இந்த நிலையில் இன்னொரு இந்திய வம்சாவளி வீரரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ரவீந்தர் சிங் போபாரா.
பேட்ஸ்மேனனான போபாரா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள்போட்டிகளில் ஆடி வரும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்துள்ள கெவின் பீட்டர்சனுக்குப் பதில் போபாரா சேர்க்கப்பட்டுள்ளார்.உலகக் கோப்பைப் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியிலும் போபாராசேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எஸ்ஸக்ஸ் அணியில் விளையாடி வருகிறார் போபாரா. அதில் அவர்சிறப்பாக விளையாடியதைப் பார்த்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தற்போதுஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications