மாயமான ஓமலூர் பள்ளி மாணவி மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஓமலூர்:காணாமல் போன ஓமலூர் பாத்திமா மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி பிரியங்காமீட்கப்பட்டார்.

பிளஸ்டூ மாணவி சுகன்யா மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சமீபத்தில்சர்ச்சையில் சிக்கிய ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8வது படித்துவருபவர் பிரியங்கா.

சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண்களைப்பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோரை வரச் சொல்லுமாறு பள்ளிநிர்வாகம் பிரியங்காவிடம் கூறியது.

தனது பெற்றோரிடம் பள்ளிக்கு வருமாறு கூறிய பிரியங்கா, அடுத்த நாள் காலைபள்ளிக்குச் செல்வதாக கூறிக் கிளம்பினார். அன்று காலை 11 மணிக்கு பிரியங்காவின்தந்தை ரவி பள்ளிக்கு வந்தார். ஆனால் பி>யங்கா பள்ளிக்கு வரவே இல்லை என்றுஆசிரியைகள் கூறவே அதிர்ச்சி அடைந்தார் ரவி.

உடனடியாக சேலம் எஸ்.பி. பாஸ்கரனுக்குத் தகவல் போனது. அவர் 3தனிப்படைகளை அமைத்து உடனடியாக தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்.

3 தனிப்படையினரும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தொளசம்பட்டி போலீஸாருக்கு நேற்று இரவு ஒரு தகவல் வந்தது.

மத்துநாயக்கன்பட்டி (இது ஓமலூரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது) பஸ் நிறுத்தத்தில் ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதாகவும், எங்கு போவதுஎனத் தெரியாமல் அவர் விழித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த ஊர் மக்கள்தெரிவித்தனர்.

இதையடுத்து ரி>யங்காவைத் தேடி வந்த தனிப்படைக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள்விரைந்து சென்றனர். போய்ப் பார்த்தபோது அது பிரியங்காதான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ஓமலூர் காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்தனர். பிரியங்காவின்பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோரும் பதறியடித்து ஓடி வந்துமகளைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

குழந்தைகள் மதிப்பெண் வாங்கியதால் பெற்றோரின் கண்டிப்பு ஆளாவோம் என்றபயத்தில் பள்ளிக்கு வராமல் ஓடியுள்ளார் பிரியங்கா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+