நல்ல சக்திகள் ஒன்று திரள வேண்டும்: கலாம்
மும்பை:மனதில் தீய சக்திகள் ஒன்று சேரும் போது அவற்றை அழிக்க நல்ல சக்திகள் ஒன்றுதிரள வேண்டும். அப்போதுதான் தீவிரவாதத்தை வேரறுக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
யாஹூ இணைய தளத்தின் யாஹூ இந்தியா ஆன்ஸர்ஸ்-ஆஸ்க் தி பிளானட் பிரிவுதொடங்கி வைக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல்கேள்வியைக் கேட்டிருந்தார்.
தீவிரவாதத்தின் பிடியிலிருந்து பூமியை விடுவிப்பது எப்படி என்ற கேள்வியைஅப்துல் கலாம் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள் தங்களது பதிலைத்தெரிவித்திருந்தனர். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், மக்சேசேவிருது பெற்றவருமான கிரண் பேடி பதிலளிக்கையில்,
தீவிரவாதிகளின் மனதில் தீவிரவாத எண்ணம் முழுமையாகஆக்கிரமித்திருப்பதால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்த முடிவு செய்கிறார்கள். தீவிரவாதஎண்ணத்திலிருந்து அவர்களை விடுவித்தால் தானாகவே ஆயுதங்களை அவர்கள் கீழேபோட்டு விடுவார்கள்.
இதற்கு முதலில் அவர்களது மனதை பக்குவப்படுத்த வேண்டும். முதலில்வன்முறைதான் மனதில் புகுகிறது. அதன் பிறகுதான் அது தீவிரவாதியாக மனிதர்களைமாற்றுகிறது.
தீவிரவாத எண்ணத்திலிருந்து மனதை விடுவிப்பதே நமது முதல் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு அரசியல் ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நாம் முயற்சிக்கவேண்டும் என்றார்.
ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளகருத்தில், ஆண்கள் மற்றும் பெண்களின் மனதில் தோன்றும் அமைதியின்மை,பதட்டம் ஆகியவையே அவர்களை தீவிரவாத எண்ணங்களுக்கு இட்டுச் செல்கின்றன.
குறுகிய கொள்கைகளும், குறுகிய மனப்பான்மையும் கூட இதற்கு இன்னொருமுக்கியக் காரணம். அனைத்து மதத்தினர், கலாச்சாரம், பின்னணியுடன் அணுசரித்துபழகும் தன்மை இல்லாததும் இன்னொரு காரணம்.
இதற்கு ஒரே தீர்வு, நாம் அனைவரும் மனித குலத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணம்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.
பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் கூறுகையில், மதவெறிதான்தீவிரவாதத்திற்கு முக்கியக் காரணம். அனைத்து மத்தினரையும் அரவணைத்துச்செல்லும் மனப் பக்குவம் நமக்கு வர வேண்டும். ஜாதி வெறி, மத வெறி அழியவேண்டும். அப்போதுதான் தீவிரவாதம் குறையும்.
அமைதியும், அன்பும் அனைவருக்கும் பரவச் செய்ய வேண்டும். அனைவரும்சமமானவர்கள்தான் என்ற எண்ணம் வந்தால் தீவிரவாதத்தை அடியோடு அழிக்கமுடியும் என்றார் பயஸ்
இறுதியில் தனது கேள்விக்கு தானே கலாம் அளித்த பதிலில், தீய சக்திகள் மனதில்புகுந்து ஆக்கிரமிக்கும்போது அதை எதிர்த்து நல்ல சக்திகள் ஒன்று திரள வேண்டும்.அப்போதுதான் தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications