கருணாநிதியை நான் விமர்சிக்கவில்லை-அச்சு
திருவனந்தபுரம்:தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக நான் தரக் குறைவாக விமர்சனம் செய்துபேசவில்லை என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெ>யாறுஅணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியிருப்பதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.
தமிழக முதல்வர் கருணாநிதி எனது நண்பர். அவருக்கு எதிராக நான் ஒருபோதும்தரக்குறைவாக, குறைத்து மதிப்பிட்டு கருத்து கூறியதில்லை. தனது மாநிலத்தில்வைகோ போன்றவர்கள் கொடுக்கும் பிரஷருக்கு கருணாநிதி பணிந்து விட்டார் என்றுமட்டும்தான் நான் கருத்து தெரிவித்திருந்தேன்.
இப்படிப்பட்டவர்களின் வலையில் விழுந்து முல்லைப் பெரியாறு பிரச்சினையில்உச்சநீதிமன்றத்தை கருணாநிதி அணுகக் கூடாது என்றுதான் நான் கூறியிருந்தேன்.
வைகோ முல்லைப் பெ>யாறு பிரச்சினையை பொய்யான தகவல்களைக் கூறிஅரசியலாக்கி வருகிறார். முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து தமிழகம் மின்சாரம்தயாரித்து அதை விற்றும் வருகிறது.
இன்னும் கூட எங்களுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளது. இதை தமிழகமும்உணர்ந்து பேச முன்வர வேண்டும் என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications