சபரிமலையில் நெரிசல்-சிக்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பத்தனம்திட்டா:சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியானார்கள். 15 பேர்காயமடைந்தனர்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந் நிலையில் நேற்று சபரிமலை சன்னிதானப் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர்.ஒருவர் 18ம் படி அருகே கூட்ட நெரிசலில் சிக்கி மாரடைப்பால் மரணமடைந்தார். இன்னொருவர் தரிசனத்துக்காகவ>சையில் காத்திருந்தபோது நெரிசலில் சிக்கி இறந்தார்.

மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்கள் கேரளாவைச்சேர்ந்தவர்கள் இல்லை என்பதை மட்டும் கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6.08 மணிக்கு நடைபெறுகிறது. அந்தநேரத்தில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். இதையொட்டி மகா அபிஷேகம் மற்றும் மகரசங்கிரம பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்படும்.

அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். ஜோதி வடிவில் தெரியும் ஐயனை காணலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

சன்னிதானம், பாணடித்தாவளம், பம்பை மலை, மடுக்குத்தாவளம் ஆகிய இடங்களில் பக்தர்கள் குழுமத்தொடங்கியுள்ளனர். இதில் பாண்டித்தாவளத்தில் மட்டும் 5 லட்சம் பேர் நின்று ஜோதியை தரிசனம் செய்யமுடியும். மகரஜோதி நிகழ்ச்சியையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+