தலைமை நீதிபதியானார் கே.ஜி.பாலகிருஷ்ணன்
டெல்லி:உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து வந்த ஒய்.கே.சபர்வால் நேற்றுடன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.இதையடுத்து மூத்த உச்சநீதிமன்ற நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்புக்கு வரும் முதல் தலித்சமூகத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவை சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல், கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
