உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு பிரசவம்!
லண்டன்:உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்குஅழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது.
பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காகஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையைஉருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக் காண்டிருந்தது.
இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில்உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது.
டாக்டர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ், பாட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரது மேற்பார்வையில் செயற்கையாக கருத்தரித்தார்லெஸ்லி. இதையடுத்து அவருக்கு 1978ம் ஆண்டு ஜூலை மாதம் லூயிஸ் பிரவுன் பிறந்தார். இவர்தான் உலகின்முதலாவது சோதனைக் குழாய் குழந்தை.
முதல் சோதனைக் குழாய் குழந்தை என்பதால் லூயிஸ் பிரவுன் பிறந்தது. முதலே விஐபியாக ஆராதிக்கப்பட்டார்.அவரது 20வது பிறந்த நாளை இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் காமன்ஸ் சபை மிகச் சிறப்பாககொண்டாடியது.
அந்த விழாவில் லூயிஸைப் போலவே சோதனைக் குழாய் மூலம் பிறந்த ஏராளமான குழந்தைகளும் கலந்துகொண்டது விழாவுக்கு மேலும் சிறப்பூட்டியது.
2004ம் ஆண்டு லூயிஸ், வெஸ்லி முலிந்தரைத் திருமணம் செய்து கொண்டார். தன்னைப் போல இல்லாமல்தனக்கு சாதாரண முறையில் கர்ப்பம் த>க்க வேண்டும் என விரும்பினார் லூயிஸ். அவர் விரும்பியது போலவேஇயற்கையாகவே கருத்தரித்தார் லூயிஸ்.
தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிஸ்டல்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications