சுனாமி குடியிருப்புகளில் கிட்னி கொள்ளை!
சென்னை:சென்னை அருகே சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும்மீனவப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு சொற்ப பணத்தைக்கொடுத்து சிறுநீரகங்களைப் பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே எண்ணூ>ல் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தஆயிரக்கணக்கான மீனவர்கள் குடும்பங்களுடன் தங்கியுள்ளனர். இவர்களில் பலர்அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் இங்கிருந்து கிளம்பிப் போய் விட்டனர்.சொற்ப எண்ணிக்கையில் மட்டும் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான வேலை கிடையாது. இதனால் வறுமையில் உழன்றுவருகின்றனர். மீன் பிடித் தொழிலும் சரியாக இல்லாததால், கையில் பணம்இல்லாததால் கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் இவர்களின் இயலாமையைப் பயன்படுத்திசொற்ப பணத்தைக் கொடுத்து கிட்னி பறிப்பு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து இவர்களிடம் பலரிடம்புரோக்கர்கள் சிறுநீரகங்களை பறித்துள்ளனர். சிலருக்கு பேசியபடி பணமும்,சிகிச்சையும் தராமல் சிறுநீரகத்தோடு எஸ்கேப் ஆகி விட்டனராம் புரோக்கர்கள்.
சென்னை, மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு இவர்களை அழைத்துச்சென்று சிறுநீரகத்தை எடுத்துக் கொண்டு பின்னர் இங்கே கொண்டு வந்துவிட்டுள்ளனர்.
இக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள்தான் அதிக அளவில் சிறுநீரகங்களை இப்படிவிற்றுள்ளனர். சில ஆண்களிடமும் சிறுநீரகம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியானதும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரன்வீர் பிரசாத் உத்தரவின் பேரில், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர்சங்கீதா, அம்பத்தூர் தாசில்தார் தீனதயாளன் ஆகியோர் சுனாமி குடியிருப்புக்குச்சென்று சிறுநீரகப் பறிப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
அப்பாவி மீனவப் பெண்களிடம் சிறுநீரகங்களை மோசடியாக எடுத்தபுரோக்கர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications