மாநகராட்சி: கலைக்க கோரும் பாஜக-வைகோ
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாபிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், மாநகராட்சியின் செயல்பாடுகளை முடக்கவேண்டும். மேயர் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கோரியுள்ளார்.
அதே போல மாநகராட்சியைக் கலைத்து விட்டு 155 வார்டுகளிலும் மறு தேர்தல்நடத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை வள்ளலார் நகரில் பாஜக சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள்விரோதப் போக்கைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இல.கணேசன்பேசுகையில், சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றநீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பிறப்பித்துள்ள தீர்ப்பில், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். (இன்னொரு நீதிபதி மறு தேர்தல்தேவையில்லை என தீர்ப்பளித்தார். இதனால் தலைமை நீதிபதியின் விசாரணைக்குஇந்த வழக்குப் போயுள்ளது). மேலும் தேர்தல் ஆணையரையும் கடுமையாகசாடியுள்ளார்.
இது இறுதித் தீர்ப்பு இல்லை என்றாலும் கூட நீதிபதியின் கருத்தை மதித்து தமிழக அரசுநடக்க வேண்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை மேயர் மா.சுப்ரமணியம் எந்த முக்கியமுடிவையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது. சென்னை மாநகராட்சியையும் முடக்கிவைக்க வேண்டும்.
99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது சென்னைமக்களுக்கு உயர்நீதிமன்றம் தந்துள்ள பொங்கல் பரிசாகும். அந்த 99 வார்டுகளின்கவுன்சிலர்களும் தங்களது உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்.
தமிழகத்தில் இனிமேல் கோவில்கள் முன்பு பெ>யார் சிலைகள் வைப்பதை பாஜகஅனுமதிக்காது. இதை மீறி கோவில்கள் முன்பு பெரியார் சிலைகளை வைத்தால்நாங்கள் விட மாட்டோம். அவற்றை அகற்றும் வரை போராடுவோம்.
தமிழக பள்ளிகளில், யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றைக் கற்றுத் தரமுதல்வர் கருணாநிதி உத்தரவிட வேண்டும் என்றார் கணேசன்.
இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, தமிழக பாஜகதுணைத் தலைவர் எச்.ராஜா, பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன்ஆகியோரும் பேசினர்.
மறு தேர்தல் கோரும் வைகோ:
இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடத்தப்பட்டது. கள்ளஓட்டுக்களைப் போட்ட அநீதியை எதிர்த்து அதிமுக, மதிமுக மற்றும் ஜனநாயகசக்திகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஜனநாயகமாளிகைக்கு ஒளி ஏற்றும் தீர்ப்பைத் தந்து இருக்கிறார். மாநகராட்சித் தேர்தல்நியாயமாக நடைபெறவில்லை. 99 வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்தப்படவேண்டும். அந்த வார்டுகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளகவுன்சிலர்கள் சான்றிதழைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால், சென்னை மாநகராட்சியையே கலைத்து விட்டு 155 வார்டுகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையர் கடமை தவறியதை நீதிபதிசுட்டிக் காட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் உடனடியாகசஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.
அதுபோல கடமையை செய்யாமல் உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்த டிஜிபிமுகர்ஜி, ஆணையர் லத்திகா சரண் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்என்று கூறியுள்ளார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications