தெருக்களில் பிச்சை எடுத்த சவர்க்கரின் பேரன்
புனே:இந்திய சுதந்திரத்திற்காக போராடி தனது இன்னுயிரை நீத்த வீர சவர்க்கரின் பேரன்புனே தெருக்களில் பிச்சை எடுத்துப் பிழைத்தைப் பார்த்த ஒரு தொண்டு நிறுவனம்அவரை மீட்டு அடைக்கலம் தந்துள்ளது.
நாட்டுக்காக போராடிய மாபெரும் வீரர்களில் வீர சவர்க்கரும் ஒருவர். ஆனால்அவரது பேரன் புனே தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்துள்ளார்.
வீர சவர்க்கரின் மகள் வயிற்றுப் பேரன் பிரபுல் மாதவ் சிப்லுங்கர். இவர் புனே நகரின்சரஸ்பாக் தோட்ட பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தமகாராஷ்டிர நவநிர்மான் சேனா என்ற தொண்டு நிறுவனம் மீட்டு தனது காப்பகத்தில்புகலிடம் கொடுத்தது.
சிப்லுங்கரின் குடும்பப் பின்னணி குறித்து அவ>டம் கேட்டேபாது அந்த நிறுவனம்அதிர்ந்து போனது. வீர சவர்க்கரின் பேரன்தான் சிப்லுங்கர் எனத் தெ>ய வந்ததால்,சிப்லுங்கருக்கு மன ரீதியான சிகிச்சைகளையும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் டோங்க்ரே கூறுகையில், பிரபுல் யார்என்பது தெரிய வந்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். அவருக்குமறுவாழ்வு கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்போது அவர் நலமாக இருக்கிறார்.தொடர்ந்து நாங்கள் அவரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவுள்ளோம் என்றார்.
டெல்லி ஐஐடியில் கெமிக்கல் என்ஜீனியரிங் படிப்பை முடித்தவர் சிப்லுங்கர். அதன்பின்னர் தாய்லாந்தில் உள்ள இந்தோ-ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.பிறகு இந்தியா திரும்பி ஆதித்ய பிர்லா நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார்.
அப்போது நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் அவர் உடல் கருகி படுகாயமடைந்தார்.டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் கிட்டத்தட்ட 6 வருடம்மருத்துவனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
2002ம் ஆண்டு நடந்த விபத்தில் தனது மனைவி, மகனைப் பறிகொடுத்தார்.அடுத்தடுத்து நடந்த சோகத்தால் மன அதிர்ச்சிக்கு ஆளாகி புத்தி பேதலித்தவர் போலஆகி விட்டார். இடையில் ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்தார். ஆனால்அந்த வேலையும் பின்னர் போய் விட்டது.
இதையடுத்து வேறு வழியின்றி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications