காதலனுடன் ஓடிய அதிமுக எம்எல்ஏ மகள் மீட்பு!
சேலம்:காதலருடன் ஓடிப் போன அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் கலைவாணியையும், அவரது காதலரானஎம்.எல்.ஏ.வின் பி.ஏ.சிவக்குமாரையும் ஹைதராபாத்தில் போலீஸார் கண்டுபிடித்து சேலம் கொண்டு வந்தனர்.
சேலம் 1வது தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் இவரது வீடுஉள்ளது. இவரது மகள் கலைவாணி (வயது 17), கல்லூ>யில் பி.எஸ்.சி படித்து வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி கலைவாணி மாயமாகி விட்டார். அன்று முதல் எம்.எல்.ஏ.வின் உதவியாளர்சிவக்குமாரையும் காணவில்லை. இதையடுத்து சிவக்குமார்தான் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகபோலீஸில் புகார் கொடுத்தார் ரவிச்சந்திரன்.
அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இறுப்பினும் எந்தத் துப்பும்கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல்செய்தார்.
அதில் புகார் கொடுத்து 45 நாட்களாகியும் தனது மகளை கண்டுபிடித்து தராமல் போலீஸார் மெத்தனமாகஉள்ளதாக அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசா>த்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மோகனக்குமார்ஆகியோர் 19ம் தேதிக்குள் கலைவாணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சேலம் மாநகரகாவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து கலைவாணியை தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டனர். இந் வேட்டையில் ஹைதராபாத்அருகே மல்லபேட் ஆனந்த் நகர் என்ற இடத்தில் கலைவாணியும், சிவக்குமாரும் குடித்தனம் நடத்தி வருவதுபோலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்து சென்று இருவரையும் சேலத்திற்குக் கூட்டி வந்தது. அவர்களிடம்ஆணையர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
பின்னர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைவாணியை யாரும் கடத்தவில்லை. அவராகவிருப்பப்பட்டுத்தான் சிவக்குமாருடன் சென்றுள்ளார்.
சேலத்திலிருந்து வாழப்பாடி வரை மோட்டார் சைக்கிளில் சென்று அதை அங்கேயே விட்டு விட்டு திருப்பதிக்குபஸ் மூலம் சென்றுள்ளனர். அங்கு வைத்து கல்யாணம் செய்து கொண்டனர்.
பிறகு ஹைதராபாத் சென்றனர். அங்கு மல்லபேட் ஆனந்த் நகரில், பிரசாத் என்பவருக்குச் சொந்தமான வீட்டில்வாடக்ைகு வீடு பிடித்துத் தங்கினர்.
அங்கு தங்கிக் கொண்டு தினமும் ரூ. 130 சம்பளத்துக்கு கொத்தனார் வேலைக்குப் போய் வந்துள்ளார்சிவக்குமார். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் சிவக்குமாருக்கு வேறுபெண்ணைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால்தான் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார்கோபாலகிருஷ்ணன்.
கலைவாணி கூறுகையில், நான் எனது சொந்த முடிவின் பேரில்தான் சிவக்குமாருடன் சென்றேன். இருவரும்கல்யாணம் செய்து கொண்டு விட்டோம். கணவன், மனைவியாக வாழ ஆரம்பித்து விட்டோம். அவருடன் தான்நான் இனி வாழ்வேன்.
பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை. எனக்கு 18 வயது ஆகும் வரை என்னை ஏதாவது காப்பகத்தில் சேர்த்துவிட காவல்துறை உதவ வேண்டும் என்றார்.
கலைவாணியை அவரது விருப்பப்படி அஸ்தம்பட்டியில் உள்ள காப்பகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.மைனர் பெண்ணான கலைவாணியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தியதால் சிவக்குமார் மீது கடத்தல் மற்றும்கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் 15 நாள் காவலில்வைக்கப்பட்டார்.
கலைவாணி இடையில் காணாமல் போயிருந்தபோது அவரது பெயரில் மாநகர காவல்துறை ஆணையருக்குகடிதம் வந்தது. அதில் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு வக்கீல்கள் இருவர் தன்னை மிரட்டுவதாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கடிதத்தை தான் எழுதவில்லை என்று கலைவாணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications