ஆபரேசன்கள் தோல்வி-காஸ்ட்ரோ கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

ஹவானா:கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 3 அறுவைச்சிகிச்சைகள் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளியாகும் எல் பாய்ஸ் என்றபத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Castro

கியூப மக்களின் அன்பையும், உலக மக்களின் அன்பையும் பெற்றவரான காஸ்ட்ரோவுக்கு (வயது 80) கடந்தஜூலை மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அதே மாதத்தில் வயிற்றில் அறுவைச்சிகிச்சை நடந்தது.

காஸ்ட்ரோவுக்கு புற்று நோய் வந்திருப்பதாக அமெரிக்கா வதந்தி கிளப்பியது. ஆனால் காஸ்ட்ரோவுக்கு புற்றுநோய் இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர்களே மறுத்ததால் அந்த வதந்தி பொய்த்துப் போனது.

தனது தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் காஸ்ட்ரோவுக்கு அறுவைச் சிகிச்சைநடந்தது. அதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்கள், வீடியோகாட்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

காஸ்ட்ரோ நலமடைந்து வருவதாகவும் விரைவில் அவர் பொதுமக்கள் முன் தோன்றுவார் என்றுஅறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஸ்ட்ரோவுக்கு செய்யப்பட்ட 3 அறுவைச் சிகிச்சைகள் தோல்வி அடைந்துள்ளதாகவும்,அவரது நிலை கவலைக்கிடமாகியுள்ளதாகவும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.

காஸ்ட்ரோவின் உணவுக் குழலில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை வெற்றி தரவில்லை என்றும் அதுதெரிவித்துள்ளது. அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அது தற்போது அபாய கட்டத்தைஎட்டியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

காஸ்ட்ரோவுக்கு தற்போது குழாய்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. என்றும், காஸ்ட்ரோவுக்கு அறுவைச்சிகிச்சை செய்த மாட்ரிட் நகரைச் சேர்ந்த இரண்டு டாக்டர்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை அந்தநாளிதழ் வெளியிட்டுள்ளது.

காஸ்ட்ரோவின் உணவுக் குழாயில் உள்ள ஒரு பகுதியை அகற்ற நடந்த முதல் அறுவைச் சிகிச்சை பலன்தரவில்லை. அதேபோல, உணவுக் குழாயின் ஒரு பகுதியை மலக்குழாய்க்குச் செல்லும் பகுதியுடன் இணைக்கநடந்த அறுவைச் சிகிச்சையும் தோல்வி அடைந்துள்ளது.

இதேபோல, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உணவுக் குழாயின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய நடந்த அறுவைச்சிகிச்சையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சைகள் தோல்வியில் முடிந்தது குறித்து காஸ்ட்ரோவுக்கு அறுவைச் சிகிச்சை செய்த மாட்ரிட்நகர டாக்டர் ஜோஸ் லூயிஸ் கார்சியா சப்ரிடோ கூறியதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஸ்ட்ரோவில் உடலில் இருந்து தினமும் அரை லிட்டர் அளவுக்கு சத்துப் பொருட்கள் அனைத்தும் வெளியாகிவிடுகின்றன. தற்போதைய பிரச்சினையிலிருந்து காஸ்ட்ரோவை மீட்க இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்யகியூப டாக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காஸ்ட்ரோவுக்கு புற்று நோய் இல்லை என்றும் டாக்டர் சப்ரிடோ தெரிவித்துள்ளார்.

காஸ்ட்ரோவுக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின்போது போடப்பட்ட தையல்தான் தற்போதுபிரச்சினையாகியுள்ளதாக கியூப டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் போடப்பட்ட தையல்கள் இன்னும் குணமாகவில்லை. இதனால்தான் காஸ்ட்ரோ தற்போதுஅவதிப்பட்டு வருகிறார். அவருக்கு புற்று நோய் ஏதும் இல்லை.

அவருக்குப் போடப்பட்ட தையல் புண் தொடர்பாக, டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் ஏழு முறை காஸ்ட்ரோஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார் அவர்.

காஸ்ட்ரோ உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கியூப அரசு எந்த விளக்கமும்அளிக்கவில்லை.

கடந்த 1959ம் ஆண்டு கியூப ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் காஸ்ட்ரோ. அதன் பின்னர் அவரே தொடர்ந்துஅதிபராக இருந்து வருகிறார். கடந்த ஜூலை 26ம் தேதிதான் அவர் கடைசியாக மக்கள் முன் காணப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+