பிப். 5ல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்த1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி. சிங் ஆட்சி காலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
நடுவர் மன்ற தலைவராக நீதிபதி என்.பி.சிங் உள்ளார். உறுப்பினர்களாக என்.எஸ்.ராவ், சுதீர் நாராயண் ஆகியோர் உள்ளனர்.
இறுதித் தீர்ப்பு வரும் வரை கர்நாடக அரசு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என நடுவர்மன்றம் இடைக்கால உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை கர்நாடகம் ஒருபோதும் நிறைவேற்ற முன்வரவில்லை.
கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே அதிலிருந்து உபரி நீரை தமிழகத்திற்கு விடுவித்து வருகிறது கர்நாடகம்.
கர்நாடக அரசு நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி பல்வேறு வகையான முயற்சிகளை தமிழக அரசுஎடுத்து விட்டது. இதை முன் வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்களும் நடந்துள்ளன. பிரச்சினைகள் பலமுறைவிஸ்வரூபம் எடுத்து இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பான சூழ்நிலைகளும் உருவாகியுள்ளன.
இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நடுவர் மன்றத்தின் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து இறுதித் தீர்ப்புஎப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தற்போது பிப்ரவரி 5ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகும் என நடுவர் மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு (தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி) முறைப்படிதெ>விக்கப்பட்டுள்ளதாக நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்து வந்த நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளதால்மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications