பாஜக-ஜெ-விஜய்காந்த் கூட்டணி:ரஜினி முன்னிலையில் சோ யோசனை
சென்னை:பாஜக-ஜெயலலிதா-விஜய்காந்த் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என துக்ளக் சோகூறினார்.
துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பாஜக தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதீபா, பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர்ரஜினி காந்த், நடிகர் நாகேஷ், அதிமுக சார்பில் மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர்.அதை முழுமையாக செய்ய முடியாமல் பார்ட் பார்ட்டாக செய்கிறார்கள்.
2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கருணாநிதி, இப்போது உள்ளங் கை அளவேனும் தருவேன் என்கிறார்.
இலவச திட்டங்களால் பிகாரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. அதே போல இங்கும்எப்போது அரசு திவால் ஆகுமோ தெரியவில்லை.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகளை நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. 99 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த சொல்லியுள்ளது. இதனால் எதிர்க் கட்சிகள் சொன்ன குற்றசாட்டுகள்நிரூபணம் ஆகிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்தம் செய்யவில்லை. நான் இதை சொன்னால்இருவரும் சேர்ந்து அணையில் குதிப்போமா என்று அழைப்பார் (கருணாநிதி).
ராஜிவ் கொலையாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு கவலைப்படவில்லை. நளினிக்கு கருணைகாட்டப்பட்டால் மகிழ்ச்சி தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். அந்த தண்டனையை ஏன் இன்னும்நிறைவேற்றவில்லை என்று தைரியமாகக் கேட்டவர் ஜெயலலிதா ஒருவர் தான். அதுவும் கூட்டணியில்வைகோவை இருக்கும்போதே கேட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு உடனடியாக ஆபத்து ஏதும் இல்லை. இந்த ஆட்சி போக வேண்டும் என்றும் சொல்லவில்லை.ஆனால், எதிர்காலத்தில் திமுக கூட்டணி கட்சிகள் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.
காங்கிரசில் உள்ள தாமகவினர் அதிருப்தியில் உள்ளனர். பாமகவும் கூட அதிருப்தியில் உள்ளது. எதிர்காலத்தில்எதுவும் நடக்கலாம்.
எதிர்க் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சித் தேர்தல் முறைகேடு அத்தோடுமுடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. சட்டமன்ற, பார்லிமெண்ட் தேர்தலும் கூட அந்த முறைகேடு நடக்கவாய்ப்புள்ளது.
எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்கக் கூடாது.விஜய்காந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும். அவர் மட்டும் தான் ஜெயிக்கும் நிலைமை வரும்.
இதை இரு கட்சிகளும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும், மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக வருவது தான்நல்லது.
எனவே பாஜக-ஜெயலலிதா-விஜய்காந்த் ஒரே அணியில் இருப்பது தான் நல்லது என்றார் துக்ளக் சோ.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications