பார்ட்டியில் மோதல்: நடிகர் டிங்கு கைது!
சென்னை:மது விருந்தின்போது நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டதில் ஒருவரது கண்ணில் பீர் பாட்டில் குத்தியது.இதுதொடர்பாக முன்னாள் குழந்தை நடிகரும், இந்நாள் டிவி சீரியல் நடிகருமான டிங்கு கைது செய்யப்பட்டார்.
பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளவர் மாஸ்டர் டிங்கு. தற்போது டிவி தொடர்களில்சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இவரது வீடு ஆலப்பாக்கத்தில் உள்ளது. பொங்கலையொட்டி தனது நண்பர்களுடன் நீலாங்கரை அருகே உள்ளரிசார்ட்டுக்கு சென்றார் டிங்கு. அங்கு நன்றாக சாப்பிட்டு விட்டு மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் விளையாட்டாக சண்டை மூண்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் பீர் பாட்டில்களைத் தூக்கிவீசி சண்டை போட்டுள்ளனர். இதில் பாட்டில் உடைந்து புருஷோத்தம்குமார் என்பவரின் கண்ணில் பீர் பாட்டில்குத்தி ரத்தம் வழிந்தது.
இதையடுத்து நீலாங்கரை போலீஸுக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து டிங்குவையும் அவரதுநண்பர்கள் மோகன், வினோத் குமார், ரவி ஆகியோரையும் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
