டாப் ஸ்லிப் சரணாலயத்தில் யானைப் பொங்கல்!
கோவை:கோவை மாவட்டம் டாப்ஸ்லிப் அருகே உள்ள கரியன் சோலை என்ற இடத்தில் உள்ள சரணாலயத்தில் யானைப்பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவின் ஒரு முக்கிய கொண்டாட்டம் மாட்டுப் பொங்கல். வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும்கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
கோவை மாவட்டம் கரியன் சோலை என்ற இடத்தில் வித்தியாசமாக இந்த ஆண்டு யானைப் பொங்கல்கொண்டாடப்படுகிறது. இங்குள்ள இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலயத்தில்தான் இதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சரணாலய காப்பாளர் வரதராஜன் கூறுகையில், யானைப் பொங்கல் கொண்டாடுவது புதிதல்ல.வருடந்தோறும் நாங்கள் மாட்டுப் பொங்கல் நாளன்று யானைப் பொங்கல் கொண்டாடுகிறோம். இதுவரைநாங்கள் மட்டுமே கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு முதல் மக்களையும் இதில் பங்கேற்கஅனுமதித்துள்ளோம் என்றார்.
இந்த சரணாலயத்தில் உள்ள கொழிகமுதி யானைகள் முகாமில் யானைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.மொத்தம் 80 கிலோ பொங்கல் சமைக்கப்படும். முகாமில் உள்ள 20 யானைகளுக்கும் இந்த பொங்கலும் கரும்பும்வழங்கப்படும்.
மேலும் யானைப் பொங்கலைக் காண வரும் மக்களுக்கு பொங்ல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
யானைப் பொங்கலையொட்டி இன்று காலையிலேயே யானைகள் அனைத்தும் குளிக்க வைக்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் ஸ்பான்சர் செய்துள்ளது. யானைப் பொங்கலைக் காண திரளான மக்கள்சரணாலயத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
