கோவை துணை நகரம்: ஜெ புகார்-அரசு மறுப்பு
கோவை:கோவை அருகே துணை நகரம் அமைப்பது தொடர்பான சர்ச்சையில் .ன்னாள் .தல்வர் ஜெயலலிதா தவறானபுகார்களைக் கூறியுள்ளதாக தமிழக வீட்டு வசதி வா>யத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தெ>வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கை:
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் மற்றும் வெள்ளலூர் கிராமங்களில் 2,000 ஏக்கர் பரப்பளவில் துணைநகரம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டள்ளதாகவும், அதற்கானநிலங்களை கையகப்படுத்துவதாகவும், இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிக்ப்பட்டிருப்பதாகவும்ஜெயலலிதா மீண்டும் மீண்டும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் அரசு சார்பாக தற்போது எந்தவிமான துணை நகரமும் அமைக்கிற திட்டம் இல்லை என்றும்அரசிடமிருந்து இதுதொடர்பாக எந்தவிதமான ஆணையும், அறிவுரைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்றும்எனவே விவசாயிகளோ, நில உரிமையாளர்களே அதுபற்றி சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று மாவட்டஆட்சித் தலைவரும், வீட்டு வசதி வாரியத் துறை நிர்வாக இயக்குனரும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
ஆனால் 2 முறை முதல்வராக இருந்து, இப்போத எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவர், அந்தப் பிரச்சினையைவிடாமல் மீண்டும் மீண்டும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதைக் காணும்போது, பிரச்சினைக்குரிய இடம்ஜெயலலிதாவுக்கோ அல்லது அவருக்கு வேண்டியவர்களுக்கோ உரிமையானதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தாசில்தாருக்கு ஏதோ அறிவுரை சென்றிருப்பதாகவும், அந்த நகலை அறிக்கையோடு இணைத்திருப்பதாகவும்ஜெயலலிதா சொல்கிறார். கடந்த ஆண்டு பட்ஜெட் விவாதத்தின்போது வீட்டு வசதித்துறையின் கொள்கைக்குறிப்பில் துணை நகரம் அமைப்பது பற்றிய சிந்தனை இருந்ததையொட்டி அனுப்பப்பட்ட கடிதம் அது.
அதன் பின்னர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக எதிர்ப்பு எழுந்த பிறகு, அரசின் சார்பில்துணை நகரம் அமைப்பதற்காக கோவையிலோ அல்லது வேறு எந்த மாவட்டத்திலும் விளை நிலங்களைக்கையகப்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டோம்.
இந் நிலையில் ஜெயலலிதா இந்த பிரச்சினையை பெரிதுபடுத்துவது அவரிடம் வேறு எந்தப் பிரச்சினையும்இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்று கூறியுள்ளார் தங்கவேலன்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications