நான் ஒரு ரப்பர் மரம்!!: ஜெயலலிதா
சென்னை:நான் ரப்பர் மரம் மாதிரி, எனக்கு ரணங்கள் புதிதல்ல என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனவரி 17 என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாழ் தான்.தமிழகத்துக்கு அவர் பொற்கால ஆட்சியை தந்தார். பள்ளி சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது என்று சத்துணவுத்திட்டம் கொண்டு வந்தார்.
நான் எப்போதுமே சவால்களை எதிர்கொள்ள தயக்கம் காட்டியதே இல்லை. ஏனென்றால் ரப்பர் மரத்துக்குரணங்கள் புதிதல்ல.
எம்ஜிஆருக்கு நான் கொடுத்த சத்தியத்தை காக்கவும் இந்த இயக்கத்தை காக்கவும் உள உறுதியோடு நான்நடத்திய யுத்தம், சந்தித்த சவால்கள், பார்த்த போராட்ட களங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
பல்வேறு அவதூறுகள், துன்மதியாளர்களின் தூற்றுதல்கள், துரோகங்கள், வசவுகள், வக்கணைகள், வஞ்சனைகள்என பல முனை தாக்குதல்கள் வந்தன. புகை நாலு பக்க சுவரை தான் கரியாக்கும், ஆகயத்தை அல்ல. இதனால்அவர்களது தாக்குதல் முனை தான் மழுங்கிப் போனது.
வருங்காலம் கோழைக்கு அல்ல, தைரியசாலிகளுக்கே என்பதை துரோகிகள் புரிந்து கொண்டார்கள். புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக என்னை மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றியை எனக்கு பரிசாக தந்ததால் கழகத்தின்ஆட்சி இருமுறை தமிழகத்தில் என் தலைமையில் அமைந்தது.
கழகத்தின் வெற்றிப் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, தொடர்ந்து கொண்டேஇருக்கும்.
மக்களுக்கு தொண்டு செய்ய நாம் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் பலமிக்க எதிர்க் கட்சியாக நாமும்பலவீனமான, மைனாரிட்டி அரசாக திமுகவும் இருக்கும் நிலையை மக்கள் தந்துள்ளார்கள். இதிலிருந்து ஒருஉண்மை புலனாகும். அதாவது மக்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
மக்களை திசை திருப்ப கருணாநிதி காட்டும் கண் கட்டு வித்தைகள் தான் இலவச திட்டங்கள். அந்ததிட்டங்களையும் சரியாக செயல்படுத்தாமல் ஏழை, எளிய மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சாயம் கொஞ்சம்கொஞ்சமாக வெளுத்துக் கொண்டுள்ளது.
அரைப்படி அரிசியிலே அன்னதானம், அதிலே கொஞ்சம் மேள தாளம் என்ற மோசடி நாடகம் தான் இப்போதுநடந்து வருகிறது.
தமிழகத்தை வழி நடத்தும் திறமை நமக்குத் தான் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். நம் பக்கம் மக்கள்இருக்கும் வரை எதிரிகளால் ஒன்றும் செய்துவிட முடியாது.
கழக ஆட்சியை விரைவில் அமைக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications