ரூ.1544 கோடி திட்டங்கள்-கருணாநிதி அடிக்கல்
சென்னை:ரூ. 1,544 கோடி மதிப்பில் சென்னை துறைமுகத்தின் 2வது சரக்குப் பெட்டகநிலையம், எண்ணூர் துறைமுக நிலக்கரித் தளம், இரும்பு தாது தளம், பெட்ரோலியக்கிடங்கு ஆகியவற்றுக்கு முதல்வர் கருணாநிதி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும்சென்னை துறைமுக மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.
இது குறித்து கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படவுள்ளன.சென்னை துறைமுகத்தில் 2வது சரக்குப் பெட்டக நிலையம் ரூ. 492 கோடியில்அமையப் போகிறது.
சென்னை-எண்ணூர் சாலை ரூ. 309 கோடியில் புதிதாக அமைக்கப்படவுள்ளது. போர்நினைச் சின்னத்திலிருந்து மதுரவாயல் வரையிலான கூவம் ஆற்றங்கரையில், ரூ.1,500 கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது.
சென்னை துறைமுகத்தில் சாலை, ரயில் போக்குவரத்து வசதி, துறைமுக தளங்கள்பலப்படுத்துதல் போன்ற பணிகள் ரூ. 800 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.மேலும் ரூ. 143 கோடி செலவில் கடலை 14 மீட்டர் வரை ஆழப்படுத்தும் பணியும்நடக்கிறது. இதன் மீலம் பெரிய கப்பல்கள் துறைமுகத்திற்குள் வர முடியும்.
இதுதவிர ஏற்றுமதி செய்யும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களைநிறுத்துவதற்காக பல அடுக்கு பார்க்கிங் வசதி ரூ. 48 கோடி செலவில்அமைக்கப்படுகிறது.
சாத்தான்காட்டில் ரூ. 50 கோடி மதிப்பில் கண்டெய்னர் சரக்குப் பெட்டகம்அமைக்கப்படுகிறது. துறைமுகத்துக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க ரூ. 50கோடியில் காற்றாலை அமைக்கப்படவுள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் ரூ. 340 கோடி செலவில் கடல் ஆழப்படுத்தப்படவுள்ளது.இதை நவீனப்படுத்தும் பணிகளுக்கு ரூ. 5,760 கோடி செலவிடப்படவுள்ளது.திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டியில் 4 வழிப்பாதை சாலை வருகிறது.கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் சாலையையும், ரயில் பாதைகளையும்இணைக்க ரூ. 850 கோடி செலவிடப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தைப் பொறுத்தவரை ரூ. 450 கோடி செலவில் கடல்ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. வெளிப் பணிகள் ரூ. 2,250 கோடிசெலவில் செய்யப்படவுள்ளன.
சென்னை துறைமுகத்தின் 2வது சரக்குப் பெட்டக நிலையம் அடிக்கல் நாட்ட விழா,மருத்துவமனை திறப்பு விழா, எண்ணூர் துறைமுகம் நிலக்கரித் தளம், இரும்புத் தாதுதுளம், பெட்ரோலியக் கிடங்கு ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளைநடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ரூ. 1,544 கோடி மதிப்பிலான இந்தப்பணிகளை தொடங்கி வைக்கிறார். சேது சமுத்திரத் திட்டப் பணிகள் விரைவாக நடந்துவருகின்றன. இதுவரை 9 மில்லியன் கியூபிக் அளவுக்கு ஆழப்படுத்தும் பணிமுடிந்துள்ளது என்றார் டி.ஆர்.பாலு.
மதங்களை இணைத்த பொங்கல்: கருணாநிதி
இதற்கிடையே முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உடன் பிறப்பே, அரசின் சார்பில் அன்பான வேண்டுகோளாகத்தான் பணிவோடு விடுத்தேன். அதுவும் தமிழ் அரசு முத்திரையோடு அல்ல, ஆணை எனும்அறிவிப்பாக அல்ல. தமிழ் எனும் உணர்வுடனே தமிழ் மக்களின் செவிக்கோர், செய்தியாக சிற்றூர், பட்டி தொட்டி, பேரூர், நகரம், மாநகர்கள் என்றுஎங்கணும் கனிவான என கோரிக்கை, தனியாக நின்று விடாமல் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம்.
நீயும் நினைப்பதையெல்லாம் சொல்ல மாட்டாய் - நின்று நிலைப்பதை நிலைக்க வேண்டியதை மட்டும்தான் சொல்வாய் - அப்படிச் சொல்வதை நீ மட்டுமேநிறைவேற்ற வேண்டுமென்றில்லாமல், நாம் ஒன்று கூடி நிறைவேற்ற வேண்டும் என்பதிலே இளமை முதலே அக்கறையும், ஆர்வமும், கொண்டவன்என்பதால்
இப்போது இந்த ஆண்டு பொங்கல் திருநாளையும், தமிழர் திருநாளாக, தமிழர் திருவிழாவாக - ஆக்கி விட்டோம் என்று நீயும் நானும் அல்ல அல்ல,நாங்களும், பெருமிதம் கொள்கிறோம் என நீ கூறுவது என் செவியில் புகுந்து என் சிந்தை அணுவெல்லாம் சிலிர்த்திடச் செய்கிறது.
ஆங்காங்கு, பொங்கல் கொண்டாடிய மகளிர், இந்த ஆண்டு முதல் நாங்கள் சமத்துவப் பொங்கல் கொண்டாடுகிறோம் என்கிறபோது, அடடா, எத்துணைபொருள் பொதிந்த வாக்கியமாக அதனைக் காணுகிறோம்.
எம்மதமும் சம்மதமேயென்று எல்லா மதங்களையும் இணைத்து நடந்த பொங்கல்!
மத வேறுபாடுகளுக்குத் துளியும் இடம் தராத பொங்கல்!
உழைப்பு, உழைப்பு எல்லா மதத்தினருக்கும் பொது!
அதன் வெற்றியில் கிட்டும் உவகை!
அதுவும் அனைத்த மதத்தினர்க்கும் பொது!
அந்தப் பொதுவில் நடமிட்ட புதுமையை, பூரிப்பை இந்த ஆண்டுப் பொங்கலன்று அனுபவித்தோம்!
இனி ஆண்டுதோறும் இந்தப் பொங்கலில் கண்ட இன்பத்தைக் காண்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications