ரணில் கட்சியை உடைத்த ராஜபக்ஷே!!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிஉடைகிறது. இக்கட்சியின் 11 எம்.பிக்கள் அதிபர் ராஜபக்ஷேவின் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக முன்னாள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளார். இக்கட்சி சமீபத்தில்தான் அதிபர் ராஜபக்ஷேவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதைத் தொடர்ந்து இக்கட்சியை அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்தார் ராஜபக்ஷே.

இந் நிலையில் ரணில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இக்கட்சியின் எம்.பிக்கள் 11 பேர் கட்சியிலிருந்து விலகிராஜபக்ஷேவின் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர்.

முன்னாள் துணைத் தலைவர் கரு ஜெயசூர்யா தலைமையில் 11 அதிருப்தித் தலைவர்களும் அணிதிரண்டுள்ளனர். இதுகுறித்து ரணில் கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கொழும்பு நகர எம்.பிகூறுகையில்,

கரு ஜெயசூர்யா தலைமையில் 11 எம்.பிக்கள் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம். விரைவில் 11பேரும் இலங்கை அமைச்சரவையில் இணையவுள்ளோம்.

ஜி.எல்.பெரீஸ் (இவர்தான் ரணில் ஆட்சியின்போது புலிகளுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்பங்கேற்றவர்), மிலிந்தா மொரகோடா, ரஜிதா சேனரத்தினே ஆகியோர் கட்சி தாவும் தலைவர்களில்முக்கியமானவர்கள்.

கட்சியிலிருந்து விலகி ஆட்சியில் சேருவது தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த முடிந்துள்ளன.இதன் பலனாக கட்சியிலிருந்து விலகும் 11 பேருக்கும் முக்கிய கேபினட் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைதர அதிபர் ராஜபக்ஷே ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் அந்த பெயர் சொல்ல விரும்பாத எம்.பி.

இதற்கிடையே, கட்சியில் பிளவைத் தடுக்கும் முயற்சிகளில் ரணில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதுதொடர்பாகஅதிபர் ராஜபக்ஷேவுடனும் அவர் பேச்சு நடத்தி வருகிறார்.

இந் நிலையில், இந்த புதிய நிகழ்வு குறித்து அதிபர் மாளிகை தரப்பில் கூறுகையில், அதிருப்தி தலைவர்கள்அதிபருடன் நேற்று இரவு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் சேருவது குறித்தும், அமைச்சரவைப்பொறுப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர் என்றனர்.

ரணில் கட்சியை ராஜபக்ஷேதான் திட்டமிட்டு உடைத்துள்ளதாக இலங்கையில் பேச்சு எழுந்துள்ளது. இந்த பிளவுகாரணமாக அரசுக்கும், ரணில் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் முறியக் கூடிய அபாயம் எழுந்துள்ளது.

புலிகள் மீது ராணுவம் தாக்குதல்:

இதற்கிடையே கிழக்கு இலங்கையில், விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீதுராணுவம் நடத்திய தாக்குதலில் 30 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாககூறப்படுகிறது. ஐந்து முகாம்களை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம்தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் பணிச்செங்கரணி என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின்பல முகாம்கள் உள்ளன. 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போதுஇந்த பகுதி விடுதலைப் புலிகள் வசம் வந்தது.

இப்பகுதியில் ராணுவம் கடும் தாக்குதலை தொடங்கியது. விடுதலைப் புலிகளும்கடுமையான பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவத்தோடு சேர்ந்துவிமானப்படையும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

தீவிரமாக நடந்த சண்டையில் இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஐந்துமுகாம்களை பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 30 புலிகள்கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு மைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 30க்கும்மேற்பட்ட விடுதலைப் புலிகள் இந்த சண்டையில் இறந்தனர். எங்களது தரப்பில் ஒருவீரர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளனர். சண்டையில் 7 பேர் மட்டுமேபலியானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவத்தின் தாக்குதலைமுறியடித்து அவர்களை விரட்டியடித்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பணிச்செங்கரணி பகுதி தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக புலிகள்தெரிவித்துள்ளனர்.

சண்டை நடந்த பகுதிக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்னும் செல்லமுடியவில்லை. எனவே உயிர்ச் சேதம் குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

இப்பகுதியில், வசிக்கும் 15,000 தமிழர்கள் பாதுகாப்பைக் கருதி வடக்கு நோக்கிநகரத் தொடங்கியுள்ளனர். 20,000 பேர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குஇடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையே வவுனியா மாவட்டத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விடுதலைப்புலிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 2 போலீஸார் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+