அஸ்ஸாமில் மன்மோகன்-பிகாரிகளுக்கு ஆறுதல்!
கொல்கத்தா:உல்பா தீவிரவாதிகளால் இந்தி பேசும் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதிகளைப் பார்வையிடபிரதமர் மன்மோகன் சிங் இன்று அஸ்ஸாம் சென்றார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தி பேசும் மக்களைக் குறி வைத்து சமீபத்தில் உல்பா தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந் நிலையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த மன்மோகன் சிங் தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிக்குச்செல்லாமல் நேராக கொல்கத்தா வந்தார். அங்கு நேற்று இரவு தங்கிவிட்டு இன்று காலை அஸ்ஸாம் சென்றார்.வன்முறையால் பாதிக்கப்பட்ட திப்ரூகர் நகருக்கு அவர் இன்று சென்றார். அவருடன் மனைவி குருசரண் சிங்கும்உடன் சென்றார்.
திப்ரூகர் வந்த பிரதமரை அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திப்ரூகர் தரவி தின்சுகியா மாவட்டத்திலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் செல்கிறார்.சகோலியா என்ற இடத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தவர்களை பிரதமர்சந்தித்து ஆறுதல் கூறுகிறார். சாதிய, மோரான் ஆகிய இடங்களுக்கும் மன்மோகன் செல்கிறார்.
கொல்கத்தா வரும் வழியில் விமானத்தில் பயணித்தபடி செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங்,
நான் இன்னும் பொருளாதார நிபுணராகவே இருப்பதாகவும், அரசியல்வாதியாக மாறவில்லை. எனக்குள் அந்தபொருளாதாரவாதி இன்னும் இருக்கிறார்.
அஸ்ஸாமில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மாநில அரசு, அஸ்ஸாம் மக்கள் உறுதியாக உள்ளனர். அவர்களுக்குமத்திய அரசு முழு உதவிகளையும் செய்யும். தீவிரவாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறப் போவதில்லை.இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளுடன் சமரசம் செய்வது கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
யாராக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முன்வர வேண்டும். வன்முறை மூலம் தங்களதுஉணர்வுகளை வெளிப்படுத்த முனைவது வெற்றியைத் தராது.
மக்களைக் காக்க வேண்டியது அரசுகளின் கடமை. அஸ்ஸாமில் உள்ள அத்தனை பொதுமக்களையும் காக்கவேண்டிய கடமையில் மத்திய அரசும், மாநில அரசும் உள்ளன. அவர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும்வாழ மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் நான்ஆர்வம் காட்டுகிறேன். டெல்லி திரும்பியவுடன், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பாகிஸ்தான்பயணம் குறித்த விவரங்களை கேட்டறியவுள்ளேன்.
சியாச்சின், சர் கிரீக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானுடன் பல சுற்றுப் பேச்சுக்கள்நடைபெற்றுள்ளன. இதில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக எப்போது ஒப்பந்தம்ஏற்படும் என்பதை இப்போது கூற முடியாது என்றார் மன்மோகன்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications