பொங்கல்: உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் வெகுஉற்சாகமாக கொண்டாடினர். இன்று தமிழக கிராமப்புறங்களில் மாட்டுப் பொங்கல்உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Tamilnadu State Adidravdar Minister Tamillarasi participating in the Pongal festival being celebrated at Mannar College in Madurai
மதுரை கல்லூரியில் பொங்கல் வைக்கும் அமைச்சர் தமிழரசி

மார்கழி மாதத்தை கடவுளுக்காக அர்ப்பணித்த பின்னர் பிறக்கும் தை மாதத்தின் முதல்நாள் அறுவடைத் திருநாள் அல்லது பொங்கல் திருநாள் என கொண்டாடப்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு தை மாதம் தமிழர்களுக்குமிகவும் முக்கியமான மாதமாகும். எனவேதான் தை மாதப் பிறப்பில் வரும் பொங்கல்திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

Tamil Nadu Governor Surjit Singh Barnalas daughter-in-law and grand-daughter participating at the Rangoli contest organised by the Chennai Corporation on the occasion of Pongal festival at Marina Beach, in Chennai on Sunday
பொங்கலையொட்டி மெரீனாவில் நடந்த ரங்கோலி கோல போட்டியில் கோலம் போடும் ஆளுநர் பர்னாலாவின் மகள், பேத்தி

தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகக் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. வீட்டு முற்றங்களிலும், தோட்டங்களிலும், மாடிகளிலும் புதுப் பானைவாங்கி, புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து மக்கள் சூரிய பகவானை வணங்கினர்.

பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம்எங்கும் தங்குக என்று கோஷமிட்டும், குலவையிட்டும் கிராமப்புறங்களில் பொங்கல்வைக்கப்பட்டது.

பொங்கல் திருநாளையொட்டி கோவில்களில் நேற்று மக்கள் சிறப்புப் பூஜைகள்நடத்தினர்.

தமிழகத்தைப் போலவே உலகெங்கும் உள்ள தமிழர்களும் பொங்கல் பண்டிகையைசிறப்பாக கொண்டாடினர்.

முதல் நாளான போகி, 2ம் நாளான பொங்கலைத் தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டி, வண்ணம்பூசி அலங்கரித்து அவற்றுக்கு சிறப்பு உணவுகளைக் கொடுத்தும், பொங்கல் வைத்தும்கிராமப்புறங்களில் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி இன்று கால்நடைகளுக்கு எந்த வேலையையும்கொடுக்க மாட்டார்கள். பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலையொட்டி தமிழகத்தின்பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.

மதுரை அவனியாபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில்100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அடக்கும் முயற்சியில்50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை அலங்காநல்லூரில்நடைபெறுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்குஅலங்காநல்லூர் தயாராகி வருகிறது.

நாளை காணும் பொங்கல்:

பொங்கல் விழாவின் கடைசி நாளான நாளை காணும் பொங்கலாககொண்டாடப்படுகிறது.

தலைநகர் சென்னையில்தான் இந்த காணும் பொங்கல் விமரிசையாககொண்டாடப்படுவது வழக்கம். தற்போது தமிழகமெங்கும் காணும் பொங்கல்விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களை சந்தித்து விருந்து சாப்பிட்டுசந்தோஷமாக இருப்பது வழக்கம்.

சென்னை நகரில் காணும் பொங்கலன்று மெரீனா கடற்கரையிலும், பிற கடற்கரைப்பகுதிகளிலும், சுற்றுலாத் தளங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

காணும் பொங்கலையொட்டி சென்னை போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்துள்ளனர்.

மெரீனா கடற்கரை உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெரீனா உள்ளிட்ட பிற கடற்கரைப் பகுதிகளில் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+