சதாம் தம்பி, நீதிபதிக்கு தூக்கு-தலை துண்டானது
பாக்தாத்:
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதிஅவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோதுபர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது.
![]() |
துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத்தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார்.
இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போதுதண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரசின் செய்தித்தொடர்பாளர் அலி அல் தப்பா கூறுகையில், அதிகாலை 3 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 5.30 மணி)இருவரும் தூக்கிலிடப்பட்டனர். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட அதே இடத்தில்தான் இருவரும்தூக்கிலிடப்பட்டனர்.
![]() |
தூக்குத் தண்டனை முறையாக நிறைவேற்றப்பட்டது. எந்த விதிமீறலும் இடம்பெறவில்லை. கைதிகள் தவறாகநடத்தப்படவில்லை. அவர்களது உரிமைகள் மீறப்படவில்லை. அவர்களை யாரும் திட்டி விமர்சிக்கவில்லை.
தூக்கிலிடும்போது பர்ஸானின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு விட்டது. சில நேரங்களில் இதுபோல நிகழும். பர்ஸானுக்குரிய தூக்குக் கயிற்றை தயார் செய்தபோது நீளம் குறைவாககயிறு தயாரிக்கப்பட்டு விட்டது. இதனால்தான் அழுத்தம் தாங்க முடியாமல் அவரது கழுத்து துண்டிக்கப்பட்டுவிட்டது என்றார் தப்பா.
இராக் அரசின் ஆலோசகர் பஸ்ஸாம் அல் ஹூசைனி கூறுகையில், பர்ஸானின் தலை துண்டிக்கப்பட்டதுகடவுளின் செயல். அதற்கு அரசைக் குற்றம் சாட்ட முடியாது. இரு கைதிகளும் முறையாகத்தான்தூக்கிலிடப்பட்டனர் என்றார்.
முதலில் பர்ஸானின் தலை துண்டிக்கப்பட்ட விவரத்தை இராக் அரசு தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துவிட்டது. ஆனால் அது எப்படியே கசிந்து விடவே தலை துண்டிக்கப்பட்டதை அரசு ஒப்புக் கொண்டது.
தூக்கிலிடப்பட்ட இருவரது உடல்களும் உடனடியாக திக்ரித் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்துசதாம் உசேனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவ்ஜா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, சதாம் அடக்கம்செய்யப்பட்ட இடத்திற்கு அருகே இருவரது உடல்களும் இரவோடு இரவாக அடக்கம் செய்யப்பட்டு விட்டன.
முன்னதாக இருவரது தண்டனையையும் அவசரப்பட்டு நிறைவேற்ற வேண்டாம் என இராக் அதிபர் தலபானிகூறியிருந்தார். நேற்று அவர் சிரியாவுக்குச் சென்றிருந்த நிலையில், பர்ஸானும், பாந்தரும் தூக்கிலிடப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இராக் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பர்ஸான். சதாமுக்கு மிகவும் நம்பகமானவர். அவரைப்பார்த்து நாடே நடுங்கியது. ஐ.நா.வுக்கான ஈராக் தூதராகவும் அவர் இருந்துள்ளார். சதாம் படையினரால்பிடிக்கப்படும் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்வதை ஆற, அமர்ந்து உட்கார்ந்து பார்ப்பாராம் பர்ஸான்.
திராட்சைப் பழங்களை சாப்பிட்டுக் கொண்டே சித்திரவதையை ரசித்துப் பார்ப்பது பர்ஸானின் வழக்கமாம்.மேலும், இவரது விசாரணைக் கூடத்தில், மனிதர்களைப் போட்டு அரைக்கும் கிரைண்டரும் இருந்ததாககூறப்பட்டது.
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க படையினரால் பர்ஸான் பிடிக்கப்பட்டார்.
ஷியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நீதிபதி அல் பாந்தர்.இவர்தான் இராக் புரட்சிகர நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். துஜைல் நகரில் ஷியாமுஸ்லீம்களைக் கொல்ல இவர்தான் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலை துண்டிப்பால் கொந்தளிப்பு:
பர்ஸானும், பாந்தரும் தூக்கிலிடப்பட்ட தகவல் ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லீம்களிடையே சந்தோஷத்தைஏற்படுத்தியுள்ளது. ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அதேசமயம், பர்ஸானின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் சன்னி முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திக்ரித் நகர முஸ்லீம்கள் கடும் ஆவேசமாக உள்ளனர்.
வேண்டும் என்றே தலையைத் துண்டித்து இராக் மற்றும் அமெரிக்கப் படையினர் பர்ஸானைக் கொன்று விட்டனர்.தூக்கில் தொங்க விடப்படும்போது தலை துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர்கள்இது மிகக் கொடூரமானது என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.
அமெரிக்க படைகளும், அவர்களின் கைப்பாவை இராக் அரசும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகின்றனஎன்றும் கோபமாக கூறினர்.
ஷியா முஸ்லீம்கள் மத்தியிலும் பர்ஸானின் தலை துண்டிக்கப்பட்டது லேசான பரிதாப உணர்வைஏற்படுத்தியுள்ளது. ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சபான் நகரைச் சேர்ந்த பள்ளி ஆசி>யர் இஸ்ஸாம்அப்துல்லா கூறுகையில், இருவரும் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இருவரும் தூக்கிலிடப்பட்டதை வரவேற்கிறேன். அதேசமயம் பர்ஸானின் தலை எப்படித் துண்டிக்கப்பட்டதுஎன்பதை அரசு விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இன மோதல் இன்னும் தீவிரமாகும் என்றார்.
வீடியோ காட்சிகள் வெளியீடு:
பர்ஸான் சர்ச்சை பெரிதாக வெடித்ததைத் தொடர்ந்து பர்ஸானும், பாந்தரும் தூக்கிலிடப்பட்டபோது எடுக்கப்பட்டவீடியோ காட்சிகளை பத்தி>க்கையாளர்களுக்கு மட்டும் போட்டுக் காட்டியது இராக் அரசு.
பர்ஸானும், பாந்தரும் சதாம் தூக்கிலிடப்பட்ட அதே தூக்கு மேடைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். அருகருகேஇருவரும் நிறுத்தப்படுகின்றனர்.
சதாமைப் போல இல்லாமல் இருவரும் மிகுந்த பயத்துடன் காணப்படுகின்றனர். அவர்களது முகங்கள் வெளிறிப்போயுள்ளன. இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுகின்றனர்.
பர்ஸானின் உடல் வேகமாக கீழிறங்குகிறது. அதேசமயம், தலை தனியாக துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்கீழே விழுகிறது. அருகே தூக்கிலிடப்பட்ட அல் பாந்தரின் தலை ஒருபக்கம் சாய்கிறது.
இந்த வீடியோ காட்சிகளை பொதுமக்களுக்குப் போட்டுக் காட்டப் போவதில்லை என்று இராக் அரசுதெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications