காணாமல் போன சிறார்கள்-தேட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:டெல்லி அருகே நொய்டாவில் சிறுவர், சிறுமிகள் பெருமளவில் கொன்றுகுவிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் காணாமல் போனகுழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க புதிய கோணத்தில் தேடுதல் வேட்டையைகாவல்துறை தொடங்கியுள்ளது.

டெல்லி அருகே உ.பி. மாநிலம் நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரைகொடூரமாக கொன்று புதைத்த கொடூரம் ஏற்படுத்திய அலை இன்னும் ஓயவில்லை.தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வந்து கொண்டே உள்ளன.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஒருஉத்தரவைப் பிறப்பித்துள்ளது. டிஐஜி தலைமையில் ஒவவொரு மாநிலத்திலும் தனிப்படைகள் அமைக்க வேண்டும். மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தபட்டியலைத் தயாரிக்க வேண்டும். அவர்களைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்த பட்டியல்தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் இதுதொடர்பான நடவடிக்கைகளில்காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க புதிய தனிப்படைகள்அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில்அதிக அளவில் சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர் என்பதும் கணக்கிடப்பட்டுவருகிறது.

சென்னை நகரில் கடந்த ஆண்டு மட்டும் 189 சிறுவர், சிறுமியர் காணாமல்போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களைக் கண்டுபிடிக்க புதிய கோணத்தில்தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

சிறுவர், சிறுமியர் காணாமல் போனதாக புகார் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல்துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில், சென்னையில்அவ்வப்போது காணாமல் போகும் சிறுவர், சிறுமியரில் முக்கால்வாசிப் பேர் திரும்பிவந்து விடுகின்றனர்.

2 வாரங்களுக்கு முன்பு கூட வீட்டில் கோபித்துக் கொண்டு சில சிறுமியர்வெளியூருக்குப் போய் விட்டனர். பின்னர் அவர்களாகவே திரும்பி வந்தனர்.அவர்களை மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தோம்.

சிறுவர், சிறுமியர் காணாமல் போனது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு போன்வந்தால், பணியில் இருக்கும் போலீஸார் உடனடியாக, உயர் காவல் அதிகாரிகளுக்குதெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் லத்திகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+