தொண்டி: திமுக-அதிமுகவினர் வெட்டு-குத்து
திருவாடானை:தொண்டி அருகே திமுகவினரும் அதிமுகவினரும் மிக பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாள், ஈட்டிக்கம்புகளுடன் நடந்த இந்த சண்டையில் பலர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அதிமுகஅமைச்சர் வ.து.நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் கைதாவார் என்று தெரிகிறது.
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் காளிமுத்துவின் மகள் லதா. உள்ளாட்சித் தேர்தலில்முன்னாள் அதிமுக அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் ஆனந்தை எதிர்த்து லதா போட்டியிட்டார். இதில் ஆனந்த்வென்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து காளிமுத்து வழக்குத் தொடர்ந்ததையடுத்து இரு தரப்புக்கம் இடையே மோதல் இருந்துவந்தது.
இந் நிலையில் ஆனந்தும், அவரது மச்சான் சிவக்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதுவழியில் நின்றிருந்த காளிமுத்து மீது இடித்துவிட்டனர். இதையடுத்து அவர்களை திமுகவினர் சுற்றி வளைத்துதாக்கினர்.
பதிலுக்கு அதிமுகவினரும் அங்கு குவிந்து திமுகவினரைத் தாக்கினர். இதில் அதிமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்ற பெண் மிக பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
பதிலுக்கு புகார் தர திமுகவினரும் காவல் நிலையத்துக்கு ஆட்டோக்களில் வந்தனர். அப்போது வழியில்நின்றிருந்த மாஜி மந்திரி நடராஜனின் ஆட்கள் ஆட்டோக்களை வழமறித்து திமுகவினரை பயங்கரமாகத்தாக்கினர்.
இதையடுத்து திமுகவினர் பெரும் கோஷ்டியாக அங்கு வந்து நடராஜனின் ஆட்களை சுற்றி வளைத்து அடித்துஉதைத்தனர். அரிவாள், ஈட்டிக் கம்புகளுடன் இரு தரப்பினரும் அடித்துக் கொண்டதில் பலருக்கு ரத்தக் காயம்ஏற்பட்டது.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்துவிரைந்து வந்த போலீசார் காளிமுத்து, அவரது மகன் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் மாஜி அமைச்சர் வ.து.நடராஜன் உள்பட 26 அதிமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடராஜனும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இந்த சண்டையால் தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications