புலிகள் தாக்குதலில் 40 ராணுவத்தினர் பலி
கொழும்பு - சென்னை:இலங்கையின் வாகரைப் பகுதியில் இலங்கை ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
வாகரையின் தெற்கில் உள்ள பணிச்செங்கரணி பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கைராணுவமும், விமானப்படையும் நடத்திய தாக்குதலில் பல முகாம்களை ராணுவம் கைப்பற்றியதாக தெரிவித்தது.
இதையடுத்து விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி பதிலடி தந்து வருகின்றனர்.
ஈச்சிளம்பட்டு, உப்போரல் ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 12 விடுதலைப் புலிகள்உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதல் குறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில்,ராணுவத் தரப்பில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.
காயமடைந்த ராணுவ வீரர்கள் பொலனருவா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.செவ்வாய்க்கிழமை காலை முதல் வாகரைப் பிராந்தியத்தில் கடும் சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கதிரவேலி பகுதியிலும் இலங்கை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின. இதில் பல தமிழர்களின்வீடுகள் சேதமடைந்தன.
புழல் முகாமிலிருந்து 22 அகதிகள் மாயம்:
இதற்கிடையே சென்னை அருகே புழல் அகதிகள் முகாமிலிருந்த 22 இலங்கை தமிழர்களைக் காணவில்லை.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 124 திறந்தவெளி முகாம்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 76,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 முகாம்கள் உள்ளன. ஒரு முகாம் புழல் அருகே காவாங்கரை என்ற இடத்திலும், இன்னொரு முகாம் கும்மிடிப்பூண்டியிலும்உள்ளன.
காவாங்கரை முகாமில் 1,117 பேரும், கும்மிடிப்பூண்டி முகாமில் 3,000 அகதிகளும் தங்கியுள்ளனர். இதுதவிர செங்கல்பட்டில் சிறப்பு முகாம் உள்ளது. இங்குபோராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என சந்தேகப்படும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் காவாங்கரை முகாமில் தங்கியிருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரைக் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. திங்கள்கிழமை இரவுதான்அதிகாரிகளுக்கு இந்த விவரம் தெரிய வந்தது.
இலங்கைக்குச் செல்வதற்காக அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் முகாமிலிருந்து வெளியேறியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாகபோலீஸில் இன்னும் புகார் கொடுக்கப்படவில்லை.
திறந்தவெளி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இவர்கள் தினமும் வேலைக்குச் சென்று வரஅனுமதிக்கப்படுகிறது. ஆனால் இரவில் அனைவரும் முகாம்களுக்குத் திரும்பி விட வேண்டும் என்ற விதி மட்டும் கடுமையாககடைப்பிடிக்கப்படுகிறது.
வெளியே போகும்போதும், திரும்பி வந்த பின்னரும் முகாம் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் அகதிகள் கையெழுத்திட வேண்டும். மாவட்டத்தைவிட்டு வெளியே போவதாக இருந்தால், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னரே போக வேண்டும்.
தற்போது காணாமல் போயுள்ளதாக கூறப்படும் 22 அகதிகளும் பொங்கலையொட்டி தங்களது உறவினர்களைப் பார்க்க வேறு ஏதாவது முகாமுக்குப்போயிருக்கக் கூடும். அவர்கள் திரும்பி வந்து விடுவார்கள் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிட்டுவின் 14ம் ஆண்டு நினைவு நாள்:
இந் நிலையில் மறைந்த கிட்டுவின் 14ம் ஆண்டு நினைவு நாளையெட்டி கிளிநொச்சியில் உள்ள அவரது சிலைக்குவிடுதலைப் புலிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலகத்தின் தலைவராக இருந்தவர் கிட்டு. 1993ம் ஆண்டு ஜனவரி16ம் தேதி கிட்டுவும், 9 விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் இலங்கைக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தபோதுஅந்தக் கப்பலை இந்திய கடற்படை சூழ்ந்தது.
இந்திய வீரர்களிடம் சிக்காமல் இருக்கும் பொருட்டு கிட்டு உள்ளிட்ட 10 பேரும் சயனைடு சாப்பிட்டும்குண்டுகளை வெடிக்க வைத்தும் கடலிலேயே மரணமடைந்தனர். கிட்டு மற்றும் 9 புலிகளின் 14ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி கிளிநொச்சியில் உள்ள பரந்தன் சந்திப்பில் உள்ள கிட்டுவின் சிலைக்கு மாலைஅணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிட்டு மற்றும் மரணமடைந்த மற்ற வீரர்களின் படங்கள் முன் தியாக ஜோதி ஏற்றப்பட்டது. மட்டக்களப்புமாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதி செந்தில் இந்த ஜோதியை ஏற்றினார்.












Click it and Unblock the Notifications