3 இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் மையங்கள்:நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி!
சென்னை:சென்னை அருகே 3 இடங்களில் கடல் நீரைக் குடிநீராக்கும் மையங்களை அமைக்கவும், ஒரு நாளைக்கு 100மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி, திருவிடந்தை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் இந்த மையங்கள்அமையவுள்ளன.
சென்னை மாநகரம் மகா நகமராக பல்கிப் பெருகி விரிவடைந்து வருகிறது. இட நெருக்கடியை விட குடிநீர்பற்றாக்குறைதான் பெரும் சவாலாக உள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் சென்னை நகர மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படும் நிலை உருவாகும் எனஅஞ்சப்படுகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை போக்க பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில்உள்ளன.
சென்னையைச் சுற்றிலும் உள்ள ஏரிகளில் முன்பு போல அதிக அளவில் நீர் சேருவதில்லை. இதனால் இதற்குமாற்றாக கடந்த அதிமுக ஆட்சியியல் புதிய வீராணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் நகரின்குடிநீர்த் தேவை பெருமளவில் குறைந்தது.
ஆனால் வீராணம் ஏரியில் தண்ணீர் இருந்ததால் பிரச்சினை தீர்ந்தது. அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் காவிரியும்வறண்டால் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது திண்டாட்டமாகி விடும்.
இதை கருத்தில் கொண்டுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு மத்தியஅரசு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.
இத்திட்டத்தை சென்னை குடிநீர் வினியோகத்தை மேற்கொண்டுள்ள மெட்ரோ வாட்டர் நிறுவனம்மேற்கொள்ளவுள்ளது. தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்தமாக்கி குடிநீராக்கி அதை சென்னைமக்களுக்கு வழங்க மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அதிமுக ஆட்சியில் உலக அளவிலான டெண்டர்விடப்பட்டது. ஆனால் அதில் கமிஷன் அடிக்க முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. அந்த முறைகேடு புகார்காரணமாக அந்த டெண்டர் கைவிடப்பட்டு விட்டது.
இந் நிலையில் இப்போது புதிதாக டெண்டர் விடப்படவுள்ளது. இந்த டெண்டரில் சில விதிகளும்தளர்த்தப்பட்டுள்ளன. 20 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மாற்றி 10எம்.எல்.டி.யாக உற்பத்தி அளவைக் குறைத்துள்ளனர்.
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி மற்றும் திருவிடந்தையில் கடல் நீரைக்குடிநீராக்கும் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மீஞ்சூரிலும் ஒரு மையம் அமையவுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications