பஸ் மோதி ஒரே பைக்கில் சென்ற 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 மாணவர்கள் அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக பலியாயினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் (20),அய்யனார் (25), தனசேகரன் (25), மனோகர் (24).
காணும் பொங்கலையொட்டி நான்கு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். நண்பர்களுடன் காணும்பொங்கலை கொண்டாடி விட்டு நள்ளிரவில் ஊர் திரும்பினர்.
கழுதூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து அவர்கள் மீதுமோதியது. இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பேருந்து ஓட்டுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications