கால்வாயில் மிதந்த அக்காள்-தம்பி பிணங்கள்
கோவை:கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கால்வாயில் மிதந்து வந்த 19 வயது பெண் மற்றும் அவரது தம்பியின் அழுங்கிய பிணங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள கருப்பராயன் கோவில் பாலம் அருகே உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட கால்வாயில் இரு அழுகிய பிணங்கள் மிதந்து வந்தன.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த இரு பிணங்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெரிய வந்த விவரம்:
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெண் கலைமணி (வயது 40). இவரது மகள் அர்ச்சனா (19), மகன் வினோத் (11).
கலைமணியின் கணவர் தினமும் குடித்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவாராம். இதனால் கலைமணிக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம்.
கணவரின் போக்கால் விரக்தியுற்ற கலைமணி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக கலைமணியின் கணவர் போலீஸார் புகார் கொடுத்திருந்தார்.
இந் நிலையில்தான் கால்வாயில் மிதந்து வந்த இரு பிணங்களை போலீஸார் கைப்பற்றினர். அவை அர்ச்சனா, வினோத் என்பது தெரிய வந்துள்ளது. இருவரது கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன.
எனவே இவர்களின் கைகளை கட்டி அவர்களை கால்வாயில் கலைமணி தள்ளி விட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கலைமணியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications