பகுஜன் தவிர 98 கவுன்சிலர்கள் ராஜினாமா
சென்னை:முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் இன்று ராஜினாமா செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங் ராஜ்மட்டும் ராஜினாமா செய்யவில்லை.
சென்னை மாநகராட்சியின் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லாவின் உத்தரவுக்கு மதிப்பளித்து அந்த வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக் கவுன்சிலர்கள்தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என கருணாநிதி நேற்றிரவுஅறிவித்தார்.
இதையடுத்து இன்று காலை மேயர் மா.சுப்பிரமணியத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திமுகவைச் சேர்ந்த 56கவுன்சிலர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அவரிடம் ஒப்படைத்தனர்.
திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தவிர திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 2 விடுதலைச் சிறுத்தைகள் கவுன்சிலர்கள்,பாமக, காங்கிரஸ் கவுன்சிலர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தையும் சேர்த்து அனைத்து ராஜினாமாக் கடிதங்களையும் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானியிடம் மேயர் சுப்பிரமணியம் கொடுத்தார்.
மேயரின் ராஜினாமா கடிதம் நாளை துணை மேயர் சத்யபாமா தலைமையில் கூடும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில்வைக்கப்பட்டு ஏற்கப்படும்.
முன்னதாக செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வரின் உத்தரவை ற்று நான் உள்பட 99உறுப்பினர்களும் ராஜினாமா செய்கிறோம். 98 கவுன்சிலர்களும் என்னிடம் கடிதம் தருகிறார்கள். நான் எனது ராஜினாமாகடிதத்தை மாநகராட்சி மாமன்ற செயலாளர் ரீட்டாவுக்கு அனுப்பி வைப்பேன்.
2 மாதங்களில் செய்த சாதனைகளைச் சொல்லி மக்களிடம் மீண்டும் ஓட்டு கேட்போம், மீண்டும் வெற்றி பெறுவோம்.கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் செய்து வரும் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்போம். தினமும் காலை 6 மணி முதல் இரவு10 மணி மக்களுக்காக உழைத்தேன். காலையில் துப்புறவுப் பணியை ஆய்வு செய்வது, 11 மணிக்கு அலுவலகம் செல்வது,மாலையில் மீண்டும் வார்டுகளுக்கு சென்று ஆய்வுப் பணி என தீவிரமாக செயல்பட்டேன். என்னைப் போலவே மற்ற மாமன்றஉறுப்பினர்களும் செயல்பட்டார்கள்.
வேலை கேட்டு என்னிடம் வந்த 140 மனுக்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி அவர்களில் 100 பேருக்கு வேலைகிடைத்துள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக3,000க்கும் மேற்பட்டோருக்கு உதவித் தொகைகள் கிடைத்துள்ளன.
கருணாநிதி ஜனநாயகத்தை மதிப்பவர். மற்றவர்கள் போல தீர்ப்பு வந்த பிறகும் அதை ஏற்காதவர் கிடையாது. நீதிமன்றத்தீர்ப்பை மதிக்கும் ஒரே முதல்வர் கருணாநிதி தான் என்பதை நிரூபித்துள்ளார். அவரது ஆணைக்கிணங்க நாங்கள் ராஜினாமாசெய்கிறோம் என்றார் சுப்பிரமணியன்.
இதற்கிடையே, கருணாநிதி உத்தரவுக்கேற்ப ராஜினாமா செய்ய காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிலர் முதலில் மறுத்து, கட்சித் தலைவர்கிருஷ்ணசாமியிடம் போய் வாதாடினர். அவர்களை சமாதானம் செய்த கிருஷ்ணசாமி அனைத்துக் கவுன்சிலர்களிடம் (25 பேர்)ராஜினாமா கடிதங்களை வாங்கினார்.
அதே போல பாமகவைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும் ராஜினாமாக் கடிதங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால்,பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மட்டும் தனது ராஜினாமா கடிதத்தைத் தர மறுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications