ஆண்களுக்கு ஆகாது-சென்னையை கலக்கும் புரளி
சென்னை:தை முதல் நாளில் சிம்ம வாகனத்தில் சூரியன், மகர ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதால் ஆண்களுக்கு ஆகாதுஎன்ற புரளி சென்னை மற்றும் புதுச்சேரியை இன்று ஒரு கலக்கு கலக்கியது.
தை மாதப் பிறப்பை தமிழர்கள் வெகு விசேஷமாக வரவேற்று பொங்கள் திருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். தை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாகவும் கருதுகின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் முதுமொழி உண்டு. இந்த நிலையில் தை பிறந்தவுடனேயே புதுப் புரளிஒன்றும் பிறந்து மக்களைக் குழப்ப ஆரம்பித்துள்ளது.
தை மாதத்தின் முதல் நாள் சூ>யன் ஒரு ராசியிலிருந்து இடம் பெயர்வார் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சிம்மவாகனத்தில் சூரியன் மகர ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆகாது என்றுநேற்று மாலை சென்னையிலும், புதுச்சேரியிலும் புரளியைக் கிளப்பிவிட்டனர் சில பிரகஸ்பதிகள்.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை நகரிலும், புதுச்சேரியிலும் பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை வீட்டின் வாசலில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் சிலவற்றிலும் இந்த புரளி பரவி அங்கும் அகல் விளக்கு ஏற்றும் வேலை படுவிறுவிறுப்பாக இருந்தது.
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களில் சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை, பச்சை சேலைஎடுத்துக் கொடுத்தால் ஆயுள் கூடும் என்ற வதந்தி கிளம்பி சேலைக் கடைக்காரர்களுக்கு யோகத்தைக் கொடுத்ததுநினைவிருக்கலாம்.
தை அமாவாசை-கடலில் நீராடி வழிபாடு:
இந் நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் பகுதிகளில்லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்குப் படையலிட்டு வழிபட்டனர்.
தை அமாவாசை நாளன்று புனித நீராடி படையல் இட்டு வழிபட்டால் மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்திஅடையும் என்பது நம்பிக்கை.
இன்று தை அமாவாசை என்பதால், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி, படையல் இட்டு முன்னோர்களை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்திலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் தை அமாவாசை நிகழ்ச்சிகள்நடைபெற்று வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications