ஜெ பாய்ச்சல்-திருமா, சிபிஎம் வரவேற்பு
சென்னை:99 வார்டுகளிலும் தேர்தல் நடத்தத் தயார் என அறிவிக்க வேண்டியது தேர்தல்ஆணையம்தான். ஆனால் கருணாநிதி 99 பேரும் ராஜினாமா செய்து தேர்தலைசந்திக்கத் தயார் எனக் கூறி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்கு 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், கூட்டணிக் கட்சிகளுடன்ஆலோசித்து 99 இடங்களில் மறு தேர்தல் நடத்த சம்மதிக்கிறோம் என அறிக்கைவிட்டிருக்கிறார் கருணாநிதி.
அந்த முடிவை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் அல்லவா? இதுபோன்ற திசைதிருப்பும் அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து நடைமுறை சாத்தியமானவற்றில் கவனம்செலுத்த வேண்டும்.
99 இடங்களுக்கு மறு தேர்தல் நடத்தக் கூட்டணிக் கட்சிகள் தயார் என்றால் தவறுநடந்திருக்கிறது என்று கருணாநிதியே ஒத்துக் கொள்கிறார் என்றுதானே அர்த்தம்?
99 இடங்களுக்கு மட்டுமல்ல, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 155வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
இவ்வாறு நடைபெறும் மறு தேர்தல், இந்த தேர்தல் ஆணையத்தை வைத்துக்கொண்டும், இந்த மாநகர காவல்துறை அதிகாரிகளை வைத்துக் கொண்டும்நடத்தப்படுவதாக இருக்கக் கூடாது.
ராணுவத்தின் பாதுகாப்புடன் 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல் வைப்பதே சரி.அதுவே அதிமுகவின் கோரிக்கை ஆகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
திருமாவளவன் மகிழ்ச்சி:
மாநகராட்சி கவுன்சிலர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் முதல்வர்கருணாநிதியின் முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஜனநாயகத்தில் முதல்வர் வைத்துள்ளநம்பிக்கையை இது காட்டுகிறது.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் இருந்தும்அது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல், இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல்முதல்வர் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது. இதன் மூலம் தான் ஒரு அரசியல்ஞானி என்பதை கருணாநிதி நிரூபித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
சிபிஎம் வரவேற்பு:
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தேர்தல் குறித்த வழக்கில் நீதிபதி இப்ராகிம்கலிபுல்லா 99 வார்டுகளிலும் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றுஉத்தரவிட்டதையடுத்து, நாங்களும் அந்த அந்த வார்டுகளிலும் மறுதேர்தல்நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினோம்.
நீதிபதி குறிப்பிட்ட 99 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பதவிவிலகச்செய்து மறுதேர்தலை சந்திப்பது என்ற திமுக தலைவர் கருணாநிதியின்அறிவிப்பை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.
திமுக மா.செ. கூட்டத்தில் பாராட்டு:
இந் நிலையில் திமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அதில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தநிலையிலும் கூட, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் கவுன்சிலர்களின் பதவிகளை ராஜினாமா செய்து மீண்டும்தேர்தலை சந்திக்க முடிவெடுத்த கருணாநிதியை பாராட்டுகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications