99 கவுன்சிலர்களும் ராஜினாமா-கருணாநிதி அதிரடி
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவழங்கிய தீர்ப்பின்படி 99 வார்டுகளிலும், திமுக கூட்டணிக் கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்து மறு தேர்தலை சந்திக்கவுள்ளதாக முதல்வர் கருணாநிதி திடீரெனஅறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறையைத் தொடர்ந்து அதிமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம்கலிபுல்லா ஆகியோர் முரண்பாடான தீர்ப்பைக் கொடுத்தனர். முகோபாத்யாயா மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் இப்ராகிம்கலிபுல்லா, 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணைநிலுவையில் உள்ளது.
இந் நிலையில் மாநகராட்சியின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்கவேண்டும். மேயர் முக்கிய முடிவுகளை எடுக்க அனுமதிக்கக் கூடாது என பாஜகமுதலில் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் 155வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.
இதைத் தொடர்ந்து 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை மேயர் உள்ளிட்ட திமுககூட்டணி கவுன்சிலர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம் என கருணாநிதிஅறிவுறுத்தியதால், இறுதித் தீர்ப்பு வரும் வரை மாநகராட்சியின் செயல்பாடுகள்நிறுத்தி வைக்கப்படுவதாக மேயர் மா.சுப்ரமணியன் அறிவித்தார்.
இந் நிலையில், நேற்று இரவு முதல்வர் கருணாநிதியிடமிருந்து ஒரு அறிக்கைவெளியானது. அதில், சென்னை மாநகராட்சிக்கு நடந்து முடிந்த தேர்தலில்முறைகேடுகள் நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மாநிலத்தேர்தல் ஆணையமே 17 பூத்துகளிலும், மீண்டும் நீதிமன்ற ஆணையின் பே>ல் 27பூத்துகளிலும் மறு தேர்தல் நடத்தியது.
அதன் பிறகும் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து,நீதியரசர் முகோபாத்யாயா அதிமுக தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தும்,மற்றொரு நீதியரசர் இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பின்படி 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியின் .டிவுக்கு காத்திருக்கவும், அதன் பின்னர்உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யவும் வாய்ப்புகள் இருந்தபோதிலும்,அதற்காக காலம் கடத்தாமல், 99 வட்டங்களிலும் வென்ற திமுக, காங்கிரஸ், பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறு தேர்தல் நடப்பதற்கு வசதியாக பதவி விலகிமறு தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
யார் அந்த 99 கவுன்சிலர்கள்?:
மொத்தம் உள்ள 155 கவுன்சிலர்களில் திமுகவுக்கு 90 பேரும், காங்கிரஸுக்கு 38பேரும், பாமகவுக்கு 17 பேரும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகளுக்குதலா 2 பேரும், மதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா ஒருவரும் உள்ளனர்.
அதிமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றது. இவர்களில் 2 பேர் கட்சி உத்தரவை ஏற்றுராஜினாமா செய்து விட்டனர். புவனேஸ்வரி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 2கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யவில்லை, மாறாக திமுகவில் சேர்ந்து விட்டனர்.மதிமுக கவுன்சிலரும் திமுகவுக்குத் தாவி விட்டார்.
உயர்நீதிமன்றத்தால் மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ள 99 வார்டுகளில் திமுக 58,காங்கிரஸ் 25, பாமக 13, விடுதலைச் சிறுத்தைகள் 2, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருகவுன்சிலர் உள்ளனர்.
ராஜினாமா செய்யும் கவுன்சிலர்கள் விவரம்:
திமுக கவுன்சிலர்கள்:
வார்டு எண் 2 - ஆர்.டி.சேகர், 4 - சாமி, 6 - சின்னப்பொண்ணு, 8- ரவி, 9-புனிதவல்லி, 12-முத்துகிருஷ்ணன், 14-தேவகி ஞானசேகரன், 18-ஸ்ரீதர், 22-சுரேஷ்ஜெயக்குமார், 23-ஜெயசங்கர், 26-சுபாஷ் சந்திரபோஸ், 27-ஜெய்னுல் ஆபிதின்,35-நெடுமாறன், 37-துரைராஜன், 40-கன்னியப்பன், 54-நாகராஜன், 56-நிர்மலா,57-துரை என்கிற காஞ்சி துரை, 59-என்.சேகர், 63-மோகன், 65-இளங்கோவன்,66-புஷ்பலதா;
68-வசந்தி, 69-சாந்தி பாய், 74-ரமேஷ், 76-சுமதி, 77-.னுசாமி, 79-அஞ்சலி தேவி,81-மதன்மோகன், 82-பிரபாகரன், 84-மதிவாணன், 86-சுரேஷ்குமார், 91-தீபா,92-லலிதா, 95-ஆர்.துரை, 103-ராஜாத்தி, 104-எழிலரசன், 106-அலூர் மஜித்,110-லில்லி சமாதானம், 111-செல்வி, 113-அன்புதுரை, 119-ராஜம், 120-மணி,122-சுப்பிரமணி, 126-எழுமலை, 127-கருணாநிதி, 129-.த்துவேல், 130-தனசேகரன்,133-கவிதா, 135-காஞ்சனா, 138-லூர்துசாமி, 139-மகேஷ்குமார்.
140-மேயர் மா.சுப்ரமணியன், 141-கென்னடி, 143-குப்பன், 147-அன்பழகன்,150-டி.வேலு, 153-கிருஷ்ணகுமார்.
காங்கிரஸ் கவுன்சிலர்கள்:
11-கிருபாகரன், 20-ரூப்சந்தர், 31-செல்லப்பன், 36-திருவேங்கடம்,48-எஸ்.பி.சங்கர், 49-மணிபால், 52-ஹேமாவதி, 70-சுரேஷ்பாபு, 73-சரஸ்வதி,78-லாசர், 83-நாகராஜன், 88-வாசுதேவன், 89-வனஜா, 97-கோவிந்தசாமி,105-ருக்மாங்கதன், 109-ஜானகி, 117-வாசுதேவன், 123-ஜெயகலா பிரபாகர்,124-சசீலா கோபாலகிருஷ்ணன், 132-வில்லியம், 144-மங்களராஜ், 151-வேலாயுதம்,152-.ருகேசன், 154-மீனாட்சி வெங்கட்ராமன், 155-சாந்தி.
பாமக கவுன்சிலர்கள்:
19-ராஜேந்திரன், 45-சாந்தலட்சுமி, 55-தங்கராஜ், 64-பி.கே.சேகர், 67-ஏழுமலை,80-ஏழுமலை, 102-பாலகிருஷ்ணன், 125-பிரகாஷ், 131-வெங்கடேசன்,134-சத்தியமூர்த்தி, 137-பிரேமா சக்ரபாணி, 142-ஜெயராமன், 149-ஜமுனா கேசவன்.
விடுதலைச் சிறுத்தைகள்: 42-பிரபு, 145-உமா வாசவி.
53வது வார்டில் வென்ற பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் ராஜ் ஆகியோர்.












Click it and Unblock the Notifications