கிட்னி கொள்ளை-சிக்கப் போகும் டாக்டர்கள்!
சென்னை:சென்னை அருகே சுனாமி தற்காலிக குடியிருப்பில் உள்ள பெண்களிடம் சொற்பபணத்தைக் கொடுத்து சிறுநீரகங்களை கொள்ளையடித்த புரோக்கர்களையும்அவர்களது கும்பல் தலைவனை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை எண்ணூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான தற்காலிககுடியிருப்பு உள்ளது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
கடும் வறுமையில் வாடி வரும் இவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல்சொற்ப பணத்தைக் கொடுத்து சிறுநீரகங்களை கொள்ளையடித்து வந்த சம்பவம்சமீபத்தில் அம்பலமானது.
சட்டவிரோதமாக நடந்த இந்த சிறுநீரக கொள்ளையில் சிக்கி சிறுநீரகங்களைஇழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களே. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரிவருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல புரோக்கர்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு இந்த சிறுநீரககொள்ளையில் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.
மைலாப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்பவன் தான் புரோக்கர்களின் தலைவனாகசெயல்பட்டு வந்துள்ளான். இவன் தலைமையில் கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தஅன்பு, பிரகாஷ், மதன், சீனிவாசன் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர்.
மேலும் காசிமேட்டைச் சேர்ந்த பெருமாள், லட்சுமி, குப்பு, வில்லிவாக்கத்த்ை சேர்ந்தகல்பனா, சரசம்மாள் ஆகியோரும் சிறுநீரக கொள்ளையில் புரோக்கர்களாகசெயல்பட்டு வந்துள்ளனர்.
மீனவப் பெண்களுக்கு ரூ. 20,000 முதல் அதிகபட்சம் 40,000 வரை மட்டுமேகொடுத்து சிறுநீரகங்களைப் பறிக்கும் இவர்கள் அவற்றை லட்சக்கணக்கில் விற்றுகொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.
சொற்ப ரூபாய்க்கு சிறுநீரகத்தை இழந்த திலகவதி என்ற பெண் கூறுகையில், 85,000ரூபாய் கொடுப்போம், மாதம் 3,000 ரூபாய் தருவோம் என்று கண்ணன்கூறியதால்தான் சிறுநீரகத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் எனக்கு40,000 ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள். மாதந்தோறும் கொடுப்பதாக கூறிய 3,000ரூபாய் பணத்தைக் கேட்கப் போனபோது நீ யாரும்மா, உன்னை எனக்குத் தெரியாதுஎன்று கூறி விட்டார் கண்ணன் என்றார் கண்களில் நீர் மல்க.
இந்த மோசடியில் நிறைய டாக்டர்களும் மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்டுள்ளன.இது தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணைமுடிவில் பெரிய திமிங்கலங்கள் சிக்கும் என தெரிகிறது.
குறிப்பாக மதுரையைச் சேர்ந்த அம்மனின் பெயர் கொண்ட அந்த பெரிய தனியார்மருத்துவமனை இந்த விவகாரத்தில் சிக்கலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications