மீண்டும் திமுக கூட்டணியே வெல்லும்: காங்கிரஸ்
சென்னை:99 வார்டுகளுக்கு நடக்கும் மறு தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் இன்று கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அவர்களிடமிருந்து ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பெரும் வாக்குவாதமே நடந்ததாக கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு அத்தனைகவுன்சிலர்களிடமிருந்தும் ராஜினாமாக் கடிதம் பெறப்பட்டதாம்.
அதன் பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூட்டணித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முதல்வர் கருணாநிதி தனது முடிவை வெளியிட்டார்.இதுகுறித்து இன்று கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கட்சிமேலிடத்தின் உத்தரவைப் பெற்று, கவுன்சிலர்களிடமிருந்து ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.
முதல்வரின் முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தேர்தலில் வன்முறை நடந்தது என்று ஒப்புக் கொள்வதாகஆகாது. மாநகராட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்று மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது.
மறு தேர்தலிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றார் கிருஷ்ணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications