உடல் நலம் தேறி வீடு திரும்பினார் மம்தா
கொல்கத்தா:சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட திரிணமீல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 20 நாள் மருத்துவமனை வாசம் முடிந்து, உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
![]() |
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் மம்தா.
அவரது உடல் நலம் மிகவும் மோசமான நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோ>ன் வேண்டுகோளை ஏற்று கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பின் டிசம்பர் 29ம் தேதி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா. அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு கடந்த 20 நாட்களாக மம்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை மம்தா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுடுக்குக் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் மம்தா பேசினார்.
அப்போது, இன்னும் 2 மாதங்களுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போதுதான் முழுமையாக குணமடைய முடியும் என்றும் கூறியுள்ளனர்.
எனது சிறுநீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க நான் விரும்பவில்லை என்றார்.
மம்தாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவரான டாக்டர் சுதர்சன் கோஷ் தஸ்திதார் கூறுகையில், மம்தாவின் கல்லீரலில் கற்கள் உருவாகியுள்ளன. அறுவைச் சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும். ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. சிறிது காலம் கழித்து செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications