குடும்ப சண்டை-கப்பலிலிருந்து குதித்து தற்கொலை
சென்னை:கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்துகுதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும்,அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்துகடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது.
பீமய்யா கடலில் குதித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலுமிகள் உடனடியாக அவரைத் தேடும் பணியில்இறங்கினர். 3 மணி நேரம் தேடியும் பீமய்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நிச்சயம் உயிருடன்இருக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்துக்கு கப்பல் வந்தவுடன் துறைமுக போலீஸில் கப்பல் அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.பீமய்யாவின் உடலைத் தேடும் பணியில், கடலோரக் காவல் படையும், கடற்படையும் இறங்கியுள்ளன.
அந்தமானில் இருந்து கணவருடன் கிளம்பிய மனைவி அழுதபடியே குழந்தைகளுடன் ஆந்திராவுக்கு கிளம்பிச்சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications