மாநகராட்சியை கலைக்க வேண்டும்-வைகோ
சென்னை:சென்னை மாநகராட்சியை கலைத்துவிட்டு எல்லா வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையும் அராஜகமும் வாக்குச் சாவடிகளைகைப்பற்றிய அக்கிரமும் நடந்தது. ஜனநாயகம் படுகொலையானது.
அதற்கு முக்கிய காரணம், சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதும்,மாநகராட்சியையும் அதிமுகவே கைப்பற்றும் என்ற திமுகவின் அச்சம் தான். அந்த பயத்தில் தான் வன்முறைவெறியாட்டத்தை நடத்தினார்கள்.
ஆனால், தேர்தல் முறையாக நடந்ததாக மாநில தேர்தல் ஆணையரும் டிஜிபியும் மாநகர போலீஸ் கமிஷ்னரும்சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இது தொடர்பான வழக்கில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என தனதுதீர்ப்பில் இடித்துரைத்தார். 3வது நீதிபதி விசாரணையிலும் மேல் முறையீடு செய்தால் உச்ச நீதிமன்றத்தில்கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து தான் 99 கவுன்சிலர்களும் பதவி விலகுவதாக அறிவித்து நாடகம்போடுகிறார்கள்.
மொத்தமுள் 155 வார்டுகளிலும் தான் அராஜகமும் மோசடியும் நடந்தது. எனவே சென்னை மாநகராட்சி மன்றம்கலைக்கப்பட வேண்டும். எல்லா வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications