ஆள் இல்லாததால் மாநகராட்சி கூட்டம் ரத்து!
சென்னை:மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட போதிய உறுப்பினர்கள் வராததால், சென்னை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று ரத்துசெய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவின் தீர்ப்பைத் தொடர்ந்தி திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்கள்நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அனைவரின் ராஜினாமா கடிதங்களையும் மேயர் மா.சுப்பிரமணியன்மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஒப்படைத்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை மாமன்றச் செயலாளர் ரீட்டாவிடம் கொடுத்தார். மேயரின் கடிதத்தை இன்று மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு மாமன்றம் கூடுவதாக இருந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர்களுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மறு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 155கவுன்சிலர்களில் ஏற்கனவே 2 பேர் ராஜினாமா செய்து விட்டனர். நேற்று 98 பேர் ராஜினாமா செய்தனர். மீதம் 55 பேர்தான்உள்ளனர்.
மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட குறைந்தது 51 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. ஆனால் அவசர அவசரமாக கூட்டம்கூட்டப்பட்டதால், அவர்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எனவேதான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பபட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications