4.85 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்-கருணாநிதி
சென்னை:தமிழகம் முழுவதும் பிளஸ்டூ பயிலும் 4.84 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவசசைக்கிள் வழங்கும் பணியை முதல்வர் கருணாநிதி இன்று சென்னையில் தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதா ஆட்சியில் பிளஸ் ஒன், பிளஸ்டூ படிக்கும் மாணவ, மாணவியருக்குஇலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
திமுக ஆட்சியிலும் இத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர்கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு பிளஸ் ஒன்படிக்கும் மாணவ, மாணவியர் 4 லட்சத்து 84 ஆயிரத்து 57 பேருக்கு இலவச சைக்கிள்வழங்கப்படுகிறது.
ரூ. 102.82 கோடிசெலவில் இந்த சைக்கிள்கள் வாங்கப்பட்டன. கடந்த ஆண்டு பச்சைநிறத்தில் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிள்கள் இந்த ஆண்டு நீலக் கலருக்குமாறியுள்ளன.
இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.முதல்வர் கருணாநிதி சைக்கிள்களை சில மாணவ, மாணவியருக்கு வழங்கிதிட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பிப்ரவரி 15ம்தேதிக்குள் சைக்கிள்களை வழங்கி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதிபேசுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 95,062 மாணவர்களுக்கும், 1.17லட்சம் மாணவிகளுக்கமாக மொத்தம் 2.12 லட்சம் பேருக்கும்;
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 66,006மாணவர்களுக்கும், 68,752 மாணவிகளுக்குமாக மொத்தம் 1,34,758 பேருக்கும்சைக்கிள் வழங்கப்படுகிறது.
இரு பி>வினரையும் சேர்த்து மொத்தம் 3.47 லட்சம் பேருக்கு ரூ. 73.78 கோடிமதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 58,815மாணவர்களுக்கும், 65,609 மாணவிகளுக்கும் மொத்தமாக 1.24 லட்சம் பேருக்கு ரூ.26.37 கோடி மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
இதர வகுப்பினர் பிரிவில் மொத்தம் 12,614 மாணவ, மாணவியருக்கு ரூ. 2.67 கோடிமதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. 2006-07ம் ஆண்டில் மொத்தமாக4,84,057 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன என்றார்.
இந் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,பொன்முடி, தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications