72 வயது முதியவருக்கு விவாகரத்து!!
சென்னை:மனைவி கொடுமை தாங்க முடியாமல் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்த 72வயது முதியவருக்கு விவாகரத்து வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு இப்போது 72 வயதாகிறது.1961ம் ஆண்டு இவருக்கும், சாந்தா என்பவருக்கும் கல்யாணம் நடந்தது.
இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இதையடுத்து ஒரு குழந்தையைத்தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சாந்தா கடந்த 1991ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இதனால் தவித்துப் போன விஸ்வநாதன், தத்துக் குழந்தை மற்றும் தனது வயதானதாயாரைக் கவனிக்க முடியாமல் திண்டாடினார். இதையடுத்து இருமுறை விவகாரத்துஆன லட்சுமி என்ற பெண்ணை 1992ம் ஆண்டு மறுமணம் புரிந்தார்.
3 ஆண்டுகள்தான் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். அதன் பின்னர் லட்சுமி,விஸ்வநாதனையும், அவரது தாயாரையும், குழந்தைதையும் கொடுமைப்படுத்தஆரமபித்து விட்டார் எனத் தெரிகிறது.
இதனால் மனம் வெறுத்த விஸ்வநாதன் தனது தாயார், குழந்தையுடன் தனியாக வந்துவிட்டார். கடந்த 10 வருடமாக லட்சுமியைப் பிரிந்து வாழும் விஸ்வநாதன்,விவகாரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் குடும்ப நீதிமன்றம் விவகாரத்து வழங்க மறுத்து விட்டது. இதையடுத்துஉயர்நீதிமன்றத்தை நாடினார் விஸ்வநாதன்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியன், தனபாலன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், தத்துப் பிள்ளைக்கு சொத்தை எழுதியதால்தான் விஸ்வநாதன் மீதுஆத்திரமடைந்து லட்சுமி கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.
இந்து திருமணச் சட்டத்தின் 76வது திருத்தத்தின்படி கொடுமைப்படுத்தும்மனைவியிடமிருந்து விவகாரத்து பெற கணவருக்கு உரிமை உண்டு. சொத்துஆசையுடன் உள்ள லட்சுமியை விட்டு 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறார்விஸ்வநாதன்.
எனவே அவருக்கு விவகாரத்து வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications