நல்லதொரு சமுதாயம்.. அரவாணிகள் பிரசாரம்!
சென்னை:கண்தானம் மற்றும் ஆரோக்கிய சமுதாயத்தை வலியுறுத்தி அரவாணிகள் ஒருவார கால பிரசார இயக்கத்தைசென்னையில் இன்று தொடங்கினர்.
இன்று அரவாணிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தஅரவாணிகள் சென்னையில் கூடி இந்த பிரசார இயக்கத்தைத் தொடங்கினர்.
![]() |
அடையாரில் உள்ள தன்னார்வ சுகாதாரப் பணிகள் மருத்துவமனையில் (வி.எச்.எஸ்) நடந்த நிகழ்ச்சியில்,தமிழகம் முழுவதும் கண்தானம் மற்றும் ஆரோக்கிய சமுதாயம் ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு வார கால பிரசாரஇயக்கத்தை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இந்தப் பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது. நல்லதொரு சமுதாயத்திற்குநாங்களும் என்ற வாசகத்துடன் இந்த பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.
சமுதாயத்தின் பிற பிரிவினரோடு அரவாணிகளும் இணைந்து வாழ்வதை உறுதி செய்யும் விதமாக இந்த பிரசாரம்அமையும்.
![]() |
பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்து வி.எச்.எஸ். செயலாளர் டாக்டர் என்.எஸ்.முரளி பேசுகையில்,சமுதாயத்தினரின் மற்ற பிரிவினரோடு இணைந்து வாழும் உரிமை அரவாணிகளுக்கும் உண்டு. அதற்கானவிழிப்புணர்வுப் பிரச்சாரமாக இந்த இயக்கம் அமையும்.
எங்களாலும் ஆக்கப்பூர்வமாக, சேவை மணப்பான்மையோடு செயல்பட முடியும் என்பதை அரவாணிகள்வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
சமூக சேவகர் பாரதி கண்ணம்மா பேசுகையில், சமுதாயத்திற்காக சேவை செய்ய அரவாணிகள் முன்வரவேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ பழக வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில்அரவாணிகளுக்கிடையே தன்னம்பிக்கையை உருவாக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் பலன் தந்துள்ளன.
மற்றவர்களை நம்பியிராமல் வாழ அவர்கள் பழகத் தொடங்கியுள்ளனர். ஒரு சமுதாயமாக அவர்கள் உருவாகிவருகின்றனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கண் தானத்தை வலியுறுத்தும் தாயின் கண்மணிகள் என்ற குறும்படமும்வெளியிடப்பட்டது. மேலும் நல்லதோர் சமுதாயத்திற்கு நாங்களும் என்ற தலைப்பில் அரவாணிகள் நடத்தியநாடகமும் நடத்தப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டுக்குச் சென்ற அரவாணிகள், அங்குள்ள குழந்தைகளுடன்கலந்துரையாடினர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக குழந்தைகளிடம் கூறிஆறுதல் தெ>வித்தனர்.
இந்த ஒரு வார கால பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக 20,000 மரக் கன்றுகளையும் அரவாணிகள்நடவுள்ளனர். இதுதவிர மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகளில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கும்அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜனவ> 24ம் தேதி சென்னையில் பிரசார இயக்கம் நிறைவடைகிறது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர்டாக்டர் பூங்கோதையை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க அரவாணிகள்திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications