மானியம் கட்!: கேஸ் விலை கிடுகிடு உயர்வு?
டெல்லி:வறுமைக் கோட்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும்மண்ணெண்ணை விலையை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா தெரித்துள்ளார்.
வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 155 ரூபாயைமத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் தான் சிலிண்டெர் ரூ. 285 முதல் ரூ.325 வரை விற்கப்படுகிறது. இல்லாவிட்டால் இதன் விலை ரூ. 400 முதல் ரூ. 450வரை இருக்கும்.
இந் நிலையில் இந்த மானியத்தை எல்லோருக்கும் வழங்காமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மற்றவர்களுக்கு சர்வதேச விலைக்கே (ரூ. 400 பிளஸ்) சிலிண்டர்களைதிட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், சமையல்எரிவாயு சிலிண்டருக்கு, 155 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இதேபோல பொது வினியோகம் வழங்கப்படும் மண்ணெண்ணை லிட்டருக்கு 9ரூபாய் என்ற கட்டணத்தில் விற்கப்படுகிறது. இது ஒரு மினரல் வாட்டர் பாட்டிலின்விலையை விட குறைவானதாகும். இதற்காக லிட்டருக்கு 15 ரூபாய் வரை அரசுமானியம் தருகிறது.
அரசு மானியம் தரும் இவை இரண்டையும் எதற்காக வசதி படைத்தவர்களுக்கு தரவேண்டும்? எனவே கேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றுக்குஇரண்டு விதமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கருத்தை மத்தியஅரசு ஏற்கிறது.
இருப்பினும் இவற்றுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும். அதைசமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம்என்பது மாநில அரசுகளின் உரிமைக்கு உட்பட்டது.
எனவே மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் பொருட்கள் ஏழைகளுக்கு மட்டுமேசெல்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.மற்றவர்களுக்கு மார்க்கெட் விலையில் பொருட்களை வழங்க வேண்டும்.
மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.இல்லாவிட்டால் இத்திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றார் தியோரா.
தியோரா கூறுவதைப் பார்த்தால், வறுமைக் கோட்டுக்கு கீழ் அல்லாதவர்களுக்கு காஸ்சிலிண்டர் ஒன்று 450 ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதேபோல மண்ணெண்ணையும் லிட்டருக்கு குறைந்தது ரூ. 30 வரை விலைநிர்ணயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பேசாம பெட்ரோலே வாங்கி எரிச்சிடலாம்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications